வணிகம்

சுகாதாரப் பணியாளர்களை கோவிட் தொற்றில் இருந்து பாதுகாக்கும் குப்பிகள்: சித்திரத் திருநாள் நிறுவனம் கண்டுபிடிப்பு

செய்திப்பிரிவு

சித்திரத் திருநாள் நிறுவனத்தின் அதிவேக உறிஞ்சும் தன்மை கொண்ட சேமிப்புக் குப்பிகள் சுகாதாரப் பணியாளர்களை கோவிட் தொற்றில் இருந்து பாதுகாக்கும்.

மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும், தன்னாட்சி பெற்ற நிறுவனமான, திருவனந்தபுரம், ஶ்ரீ சித்திரத் திருநாள் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் விஞ்ஞானிகள், தொற்றால் பாதிக்கப்பட்ட சுவாசச் சுரப்புகளைப் பாதுகாப்பாகப் பராமரிக்கும் உறிஞ்சுக் குப்பிகளை வடிவமைத்து உருவாக்கியுள்ளனர்.

சுவாச உறுப்புகளில் உள்ள திரவம் மற்றும் உடலில் கெட்டிப்படும் இதர திரவங்களை சிறந்த முறையில் உறிஞ்சி எடுத்து தொற்றை நீக்கும் தன்மை கொண்டது இது.

ஶ்ரீ சித்திரத் திருநாள் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் உயிரி மருத்துவத் தொழில்நுட்பப் பிரிவின், உயிர்ப்பொருள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் டாக்டர் மஞ்சு, டாக்டர் மனோஜ் கோமத், டாக்டர் ஆஷா கிஷோர் மற்றும் டாக்டர் அஜய் பிரசாத் ஹிரிஷி ஆகியோர் இதை உருவாக்கியுள்ளனர்.

தொற்று ஏற்பட்டுள்ள சூழலில், தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் சுரப்புகளைப் பாதுகாப்பாக அகற்றுவது, மிக முக்கியமான முறையாகும் சித்ரா அக்ரிலோ சார்ப் என்னும் இந்தப் பொருள், சுவாச உறுப்புகளில் உள்ள திரவம் மற்றும் உடலில் கெட்டிப்படும் இதர திரவங்களைச் சிறந்த முறையில் உறிஞ்சி எடுத்துத் தொற்றை நீக்கும் தன்மை கொண்டது

SCROLL FOR NEXT