வணிகம்

கரோனா காலத்திலும் சாலைப்பணிகள் தீவிரம்; கடந்த ஆண்டைவிட  2 மடங்கு அதிகம்

செய்திப்பிரிவு

இந்த வருடத்தின் ஏப்ரல்-ஆகஸ்ட் தேசிய நெடுஞ்சாலை கட்டுமான இலக்கை சாலை போக்குவரத்து அமைச்சகம் தாண்டியது, 3100 கி.மீ சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன

நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகள் கட்டமைப்பதற்காக நிர்ணயிக்கப்பட்ட இலக்கை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் தாண்டியுள்ளது.

இந்த வருடத்தின் ஏப்ரல் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான தேசிய நெடுஞ்சாலை கட்டுமான இலக்கான 2771 கிலோமீட்டர்களுக்கு மாறாக, 3181 கிலோமீட்டர்களுக்கு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், இந்த வருடத்தின் ஆகஸ்ட் வரை, 3300 கிலோமீட்டர்களுக்கு சாலைகள் அமைப்பதற்கான தேசிய நெடுஞ்சாலைப் பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன. கடந்த வருடத்தின் இதே காலகட்டத்தின் 1367 கிலோமீட்டர்களுடன் ஒப்பிடும் போது இது இரு மடங்கை விட அதிகமாகும்.

SCROLL FOR NEXT