வணிகம்

நிலக்கரி சுரங்க ஏலம்; பட்டியல் மாற்றம்

செய்திப்பிரிவு

நிலக்கரி விற்பனைக்கான சுரங்கங்களின் பட்டியலில் மாற்றம் செய்யப்பட்டு 38 சுரங்கங்கள் ஏலத்தில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வணிக ரீதியிலான சுரங்கப் பணிகளுக்கான நிலக்கரி சுரங்கங்களின் ஏல செயல்முறை ஜூன் 18, 2020 அன்று தொடங்கப்பட்டது. நிலக்கரி விற்பனைக்கான சுரங்கங்களின் பட்டியலில் கீழ்கண்ட மாற்றங்களை நிலக்கரி அமைச்சகம் செய்துள்ளது.

1. சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம், 1957-இன் கீழ் முதல் கட்ட ஏலத்தில் டோலேசரா, ஜரேகலா மற்றும் ஜர்பலம்-தங்கர்காட் நிலக்கரி சுரங்கங்கள் சேர்க்கப்பட்டன.

2. சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம், 1957-இன் கீழ் மோர்கா தெற்கு நிலக்கரி சுரங்கம் முதல்கட்ட ஏலத்தில் இருந்து நீக்கப்பட்டது.

3. நிலக்கரி சுரங்கங்கள் (சிறப்பு பிரிவுகள்) சட்டம், 2015-இன் கீழ் பதேபூர் தெற்கு, மதன்புர் (வடக்கு), மோர்கா-II, மற்றும் சயாங்க் நிலக்கரி சுரங்கங்கள் பதினொன்றாம் கட்ட ஏலத்தில் இருந்து நீக்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து, நிலக்கரி சுரங்கங்கள் (சிறப்பு பிரிவுகள்) சட்டம், 2015 மற்றும் சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம், 1957 ஆகியவற்றின் கீழ் நடத்தப்படும் 11-ம் கட்ட மற்றும் முதல் கட்ட ஏலங்களில் 38 நிலக்கரி சுரங்கங்கள் இடம்பெறும்.

SCROLL FOR NEXT