டிக்டாக் தலைமைச் செயல் அதிகாரி கெவின் மேயர் வியாழனன்று ராஜினாமா செய்தார், பிரபலமான இந்த செயலியை விற்கக் கோரி அமெரிக்கா நெருக்கடி கொடுத்து வரும் நிலையில் அவர் ராஜினாமா செய்துள்ளார்.
தன் பணியாளர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில் , அரசியல் சூழ்நிலை மிகவும் மாறியிருப்பதால் தான் நிறுவனத்தில் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டோனால்டு ட்ரம்ப் டிக் டாக் செயலியை தடி செய்து உத்தரவிட்டார். அதாவது 90 நாட்களுக்குள் இந்த டிக் டாக் செயலி தன் அமெரிக்கச் செயல்பாடுகலை அமெரிக்க நிறுவனத்துக்கு விற்றால்தான் தொடர முடியும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டதையடுத்து சி.இ.ஓ. கெவின் மேயர் ராஜினாமா செய்துள்ளதாகத் தெரிகிறது.
“கார்ப்பரேட் அமைப்புரீதியான மாற்றங்களுக்கு என்ன தேவை என்பது குறித்தும் நான் உலக அளவில் என்னமாதிரியான பங்காற்றுவதற்காக இங்கு இருக்கிறேன் ஆகியவை குறித்து நான் குறிப்பிடத்தகுந்த சிந்தனை மேர்கொண்டேன்.
இந்தப் பின்னணியில் கனத்த இதயத்துடன் நான் இந்த நிறுவனத்தை விட்டு விலகுகிறேன் என்பதை உங்கள் அனைவருக்கும் தெரியப்படுத்த விரும்பினேன்” என்று தன் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
டிஸ்னியில் உயரதிகாரியாக பணியாற்றிய மேயர், டிக்டாக் நிறுவனத்தில் தலைமைச் செயலதிகாரியாக கடந்த மே மாதம் சேர்ந்தார்.
இவரது கெவினின் ராஜினாமா குறித்து டிக்டாக் நிறுவனம் கூறும்போது, “கடந்த சில மாதங்களாக அரசியல் செயல்பாடுகள், தொழிற்பாடுகள் கடுமையாக மாற்றமடைந்துள்ளது என்பதை அறிகிறோம், இதில் நிறுவனத்தை முன்னேற்றிச் செல்ல கெவின் என்ன பாங்காற்ற முடியும் என்பதும் குறிப்பிடத்தக்க வகையில் சிந்திக்கப்பட்டது, எனவே அவரது முடிவை முழுதும் மதிக்கிறோம்
இந்த நிறுவனத்தில் அவர் ஆற்றிய சேவைகளுக்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம், அவரது எதிர்கால நன்மைக்காகவும் வாழ்த்துகிறோம்” என்று தெரிவித்துள்ளது.
இவருக்குப் பதிலாக தற்காலிகமாக சி.இ.ஓ. பொறுப்பு ஏற்கிறார் பொது மேலாளர் வனேசா பப்பாஸ்.