வணிகம்

மாற்றுத்திறனாளிகள் நலன்; மாநில தலைமைச் செயலர்களுக்கு மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறையின் செயலர் கடிதம்

செய்திப்பிரிவு

மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறையின் செயலாளர், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரசேதங்களின் தலைமை செயலாளர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

இந்தக் கடிதத்தில், தகுதி உள்ள அனைத்து மாற்றுத்திறனாளி நபர்களையும், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013-ன் கீழான பலன்களைப் பெறுவதற்காக சேர்க்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த விஷயத்தில் தலைமைச் செயலாளர்கள் தனிப்பட்ட கவனம் செலுத்த வேண்டும் என்றும், தொடர்புடைய அனைத்துத் துறைகளையும், அதிகாரிகளையும், குறிப்பாக மாவட்ட நிர்வாகத்தையும் அறிவுறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக, 2020 ஆகஸ்டு 22-ம் தேதியிட்ட கடிதத்தில், தகுதியுள்ள அனைத்து மாற்றுத்திறனாளர்களுக்கும், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013-ன் கீழ், அவர்களுக்கு உரிய அளவில் உணவு தானியங்களை வழங்க வேண்டும் என்று மத்திய அரசு, அனைத்து மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும் அறிவுறுத்தியிருந்தது.

இந்தச் சட்டத்தின் கீழ் வராத மாற்றுத்திறனாளர்களுக்கு, புதிய ரேஷன் கார்டுகள், தகுதியின் அடிப்படையில் விநியோகிக்கப்பட்டு மாற்றுத்திறனாளர்கள் உரிய பலன்களைப் பெறச்செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருந்தது.

SCROLL FOR NEXT