வணிகம்

இவரைத் தெரியுமா?- ஆஷிஷ் சவுத்ரி

செய்திப்பிரிவு

நோக்கியா நெட்வொர்க்ஸ் நிறுவனத்தில் உலக அளவில் வாடிக்கையாளர் செயல்பாடுகளுக்கான தலைமைத் தொழில் அதிகாரியாக உள்ளார். இந்த ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து இந்தப் பொறுப்பில் இருக்கிறார்.

ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடு களில் நோக்கியா நெட் வொர்க்ஸின் விற்பனை மற்றும் அனைத்து செயல் பாடுகளுக்குமான செயல் துணைத் தலைவராகவும் உள்ளார். இந்த ஆண்டு இறுதிவரை இந்தப் பொறுப்பில் இருப்பார்.

இந்த நிறுவனத்தின் இந்தியத் தலைவராக டிசம்பர் 2003 சேர்ந்தார்.

தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் கொண்டவர்.

உலக அளவில் தொலைதொடர்பு துறைக்கு தொழில்நுட்ப ஆலோசனைகள், மற்றும் புதிய உருவாக்கம் சார்ந்த பங்களிப்புகளை செலுத்தியவர்.

ஹக்கீஸ் நெட்வொர்க்ஸ் சிஸ்டம்ஸ் மற்றும் ஹக்கீஸ் எஸ்கார்ட்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தில் முதன்மை இயக்குநர் மற்றும் துணைத் தலைவராக பணியாற்றிய அனுபவமும் கொண்டவர்.

டெல்லியைச் சேர்ந்தவர். டெல்லி பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் முதுகலை பட்டம் மற்றும் வார்டன் பல்கலைக்கழகத்தில் மேலாண்மையியலில் பட்டமும் பெற்றவர்.

SCROLL FOR NEXT