தனி நபர் வருமான வரி மற்றும் நிறுவன வரிகளை நிர்வகித்து வரும் மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடப்பு நிதியாண்டில்இதுவரையில் ரூ.88,652 கோடிமதிப்பில் ரீபண்ட் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இவற்றில் தனி நபர்களுக்கான வருமான வரி ரீபண்ட் ரூ.28,180 கோடியாகும். இது 23.05 லட்சம்வரிதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் நிறுவனங்களுக்கான வருமான வரி ரீபண்ட் ரூ.60,472 கோடியாகும். இது 1.58 லட்சம் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
கரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே நிதி நெருக்கடியால் தொழில்களும் தனி நபர்களும் பாதிக்கப்படக் கூடாது என்பதால் ரீபண்ட் நடவடிக்கைகளை மிகவும் துரிதமாகச் செயல்படுத்த அரசு அறிவுறுத்தியது.