விஜயவாடாவில் உள்ள ஹார்லி-டேவிட்சன் ஷோ ரூம்.| படம்: வி.ராஜு. 
வணிகம்

இந்தியாவை விட்டு வெளியேறுகிறதா அமெரிக்க நிறுவனம் ஹார்லி-டேவிட்சன்?

செய்திப்பிரிவு

பலவீனமான விற்பனை, எதிர்காலம் பற்றிய துலக்கமின்மை ஆகிய காரணங்களினால் அமெரிக்காவின் பிரபல இருசக்கர மோட்டார் வாகன நிறுவனமான புகழ்பெற்ற ஹார்லி-டேவிட்சன் இந்தியாவில் தன் நிறுவனத்தை மூடிவிடும் என்று இந்தத் தொழிற்துறையைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.

ஹார்லி-டேவிட்ஸன் இந்தியாவுக்குள் நுழைந்து 10 ஆண்டுகள்தான் ஆகின்றன.

ஹரியாணா பாவால் என்ற இடத்தில் தங்கள் மோட்டார் வாகன அசெம்ப்ளி யூனிட்டை குத்தகைக்கு விட்டுள்ள நிலையில் ஆலோசனை நிறுவனங்கள் மூலம் ஹார்லி -டேவிட்சன் நிறுவனம் அவுட் சோர்சிங் ஏற்பாடுகளுக்காக ஆலோசித்திருப்பதாகத் தெரிகிறது.

கடந்த மாதமே தங்கள் நிறுவன 2ம் காலாண்டு வருவாய் நிலவரங்களை வெளியிட்ட போது, “விற்பனை, லாபம் குறைவாக இருக்கும் சர்வதேச சந்தைகளிலிருந்து வெளியேற திட்டமிட்டு வருகிறோம்” என்று கூறியிருந்தது.

கடந்த நிதியாண்டில் ஹார்லி-டேவிட்சன் 2,500 வாகனங்களையே விற்றுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் இந்த நிறுவனத்துக்காக இந்தியாவுடன் வரிக்குறைப்புக்காக போராடினார், இந்நிலையில் ஹார்லி-டேவிட்ஸன் வெளியேறினா, ஜெனரல் மோட்டார்ஸ் என்ற அமெரிக்க நிறுவனத்துக்குப் பிறகு வெளியேறும் 2வது அமெரிக்க நிறுவனமாக இருக்கும். ஜிஎம் நிறுவனம் 2017-ல் வெளியேறியது.

விற்காத வாகனங்களுக்கு ஹார்லி டேவிட்சன் பெரிய அளவில் கழிவுகளை வழங்கி விற்க முயன்றது, அதாவது தன் இரண்டு மாடல்கள் வாகனங்களுக்கு ரூ.65,000 முதல் ரூ.77,000 வரை கழிவுகளை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT