செர்கோ பிபிஓ நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை பிரைவேட் ஈக்விட்டி நிறுவனமான பிளாக்ஸ்டோன் வாங்கி இருக்கிறது. இந்த இணைப்பின் மதிப்பு ரூ.2,558 கோடி ஆகும்.
2011-ம் ஆண்டு தன்வசம் உள்ள பிபிஓ தொழிலை (Intelenet) செர்கோ நிறுவனத்துக்கு 63.4 கோடி டாலர் அளவுக்கு பிளாக்ஸ்டோன் விற்றது. அப்போது செர்கோ நிறுவனத் துக்கு தனது பிஸினஸை விற்றது. இப்போது செர்கோ நிறுவனத் தையே வாங்கியுள்ளது பிளாக் ஸ்டோன்.
நிறுவனத்தை வாங்கிய பிறகு Intelenet குளோபல் சர்வீசஸ் என்று பெயர்மாற்றம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
செர்கோ நிறுவனம் தனது கடனை குறைப்பதற்காக விற்றிருக்கிறது. ஆனால் இந்த நிறுவனத்தின் இங்கிலாந்து பிஸினஸ் அதிலிருந்து பிரிக்கபட்டிருக்கிறது. இந்த இணைப்பு வரும் டிசம்பர் மாதத்தில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Intelenet நிறுவனத்தின் இரண்டாவது (2.0) பயணத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் என்று பிளாக்ஸ்டோன் நிறுவனத் தின் மூத்த நிர்வாக இயக்குநர் அமித் திக்ஷிட் தெரிவித்தார்.
செர்கோ நிறுவனம் 8 நாடுகளில் 67 இடங்களில் செயல்பட்டு வருகிறது. ஆண்டுக்கு 2,405 கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் ஈட்டி வருகிறது. இந்த நிறுவனத்துக்கு முழுநேரமாக 51,000 பணியாளர்கள் பணிபுரிகிறார்கள்.