கள்ள நோட்டுகளை தடுக்க எண் வரிசை முறையில் மாற்றம் கொண்டுவரவும், ஏழு புதிய பாதுகாப்பு அம்சங்களை அமல்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாரதிய ரிசர்வ் பேங்க் நோட் முட்ரன் மற்றும் செக்யூரிட்டி பிரிட்டிங் அண்ட் மிண்டிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா ஆகிய நிறுவனங்கள் இந்த நடவடிக்கையை தொடங்கி யுள்ளதாக தகவல்கள் தெரிவிக் கின்றன. முதல் கட்டமாக ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகளில் இந்த பாதுகாப்பு அம்சங்கள் கொண்டுவரப்படும். அடுத்த ஆண்டு மே மாதம் முதல் அனைத்து ரூபாய் நோட்டுகளிலும் இந்த முறை கொண்டுவரப்படும் என்று தெரிகிறது.
இதற்கு மத்திய அரசு அனுமதி கொடுத்திருக்கிறது. ஆனால் பாதுகாப்பு அம்சங்கள் குறித்த விவரம் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. இதுவரை 30 கோடி ரூபாய்க்கு மேலான கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கணிக்கப்பட்டிருக்கிறது.
பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம் மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் கள்ள நோட்டுகள் கொண்டு வரப் படுகின்றன. இப்போது மலேசியா, தாய்லாந்து மற்றும் ஓமன் ஆகிய நாடுகளில் இந்தியர்களின் போக்குவரத்து அதிகமாக இருப்பதால், இந்த நாடுகள் புதிய மையங்களாக செயல்பட்டு அங்கிருந்து கள்ள நோட்டுகளை இந்தியாவுக்குள் புழக்கத்துக்கு விடுவதாக தகவல்கள் தெரி விக்கின்றன.