ஜூலை மாத மொத்த விலை குறியீட்டு எண் வெளியிடப்பட்டுள்ளது.
2020 ஜூலை மாதத்திற்கான மொத்த விலை குறியீட்டெண்ணை மத்திய தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு துறையின் பொருளாதார ஆலோசகர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
ஜூலை மாதத்திற்கான வருடாந்திர பணவீக்க விகிதம், -0.58 சதவீதமாக இருந்தது.
ஜூலை மாதத்தில் முதன்மை சரக்குகளுக்கான விலைக் குறியீட்டெண் 3.16 சதம் அதிகரித்து 143.7 ஆக இருந்தது.
கச்சா, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுக்கான குறியீட்டெண் 17.30 சதமும், உணவுப் பொருட்களுக்கான குறியீட்டெண் 3.41 சதமும், 2020 ஜூன் மாதத்தை விடக் குறைவாக இருந்தது.