வணிகம்

ஆண்டு வருமானம் ரூ.50 லட்சம் பெறுவோர் ஒரு சதவீதம்தான்

செய்திப்பிரிவு

கடந்த 5 ஆண்டுகளாக வரி செலுத்துவோர் பட்டியலை வருமான வரித்துறை வெளியிட்டுள்ளது. வரி செலுத்துவோரது நிரந்தர கணக்கு எண் (பான்) மற்றும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டதன் அடிப்படையில் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. மொத்தம் தனி நபர் வருமான வரி செலுத்துவோரில் 57 சதவீதத்தினரின் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சமாக உள்ளது. வரி செலுத்துவோரில் ஒரு சதவீதம் பேரது ஆண்டு வருமானம் ரூ.50 லட்சமாக உள்ளது.

வரி செலுத்துவோர் 1.5 கோடி. இது மொத்த மக்கள் தொகையில் 1.6 சதவீதமாகும். கடந்த 5 ஆண்டுகளில் வரி செலுத்துவோருக்கு நோட்டீஸ் அனுப்புவது, வரி படிவத்தை மறு பரிசீலனை செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் ஆண்டுதோறும் படிப்படியாகக் குறைக்கப்பட்டுள்ளன.

வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பினாலே அதைப் பெறுபவர் தவறு செய்துவிட்டார், வரி ஏய்ப்பு செய்துவிட்டார் என்று அர்த்தமல்ல. அது வருமான வரித்துறை மேற்கொள்ளும் வழக்கமான நடைமுறை. கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி முதல் ஆவண அடையாள எண் (டிஐஎன்) வழங்கும் முறை உருவாக்கப்பட்டுள்ளது. இன்னமும் 17.1 கோடி பேர் பான் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்காமல் உள்ளனர். பான் அட்டை பெற்றுள்ளவர்களின் எண்ணிக்கை 50 கோடியாகும். இதில் 32.71 கோடி பேர் மட்டுமே பான்-ஆதார் இணைப்பு செய்துள்ளனர்.

SCROLL FOR NEXT