வணிகம்

கடனுக்கான வட்டி விகிதம் குறைப்பு: இந்தியன் ஓவர்சிஸ் வங்கி நடவடிக்கை

செய்திப்பிரிவு

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான இந்தியன் ஓவர்சிஸ் வங்கி அடிப்படை வட்டி விகிதத்தை 10 பைசா அளவில் குறைந்து 9.35 சதவீதமாக நிர்ணயித்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை கூட்டம் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை நடத்தப்பட்டு, வட்டி விகிதம் மற்றும் நிதிக்கொள்கை முடிவுகள் வெளியிடப்படும்.

இந்தியப் பொருளாதாரமும், தொழில்துறையும் சுணக்கமாக இருக்கும் சூழலில் அதிக அளவிலான முதலீடுகளை சந்தையில் வரச்செய்து அதன் மூலம் பொருளாதாரத்தை ஊக்குவிக்க வேண்டியது அவசியமாக உள்ளது.

முதலீடுகள் அதிகரிக்கவும், தொழில்துறைக்கும், வரத்தகத்துக்கும் ஊக்களிக்க வேண்டுமெனில் வங்கியின் கடன் வட்டி விகிதம் குறைவாக இருக்க வேண்டும். சுணக்க நிலையில் இருக்கும் பொருளாதாரத்தை உயர்த்த ஏற்கெனவே 5 முறை வட்டி விகிதத்தைக் ரிசர்வ் வங்கி குறைத்தது. இதன்படி தற்போது கடனுக்கான வட்டி வீதம் 4 சதவீதமாக இருந்து வருகிறது.

இந்நிலையில் ரிசர்வ் வங்கியின் 2 மாதங்களுக்கு ஒருமுறை நடக்கும் நிதிக்குழுக் கூட்டம் அண்மையில் நடந்தது. இந்த கூட்டத்தில் வங்கிக்கடனுக்கான வட்டி வீதத்தில் எந்தவிதமான மாற்றமும் செய்யவில்லை. அதன்படி வட்டி வீதம் 4 சதவீதம் எனும் அளவிலேயே தொடர்கிறது. எதிர்வரும் காலங்களில் பொருளதாார வளர்ச்சியை ஊக்குப்படுத்துவதற்காக வட்டி வீதத்தில் தேவைப்பட்டால் மாற்றம் செய்யப்படும்

இறுதிநிலை வட்டி வீதம் எனப்படும எம்எஸ்பி ரேட் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் 4.25 அளவிலேயே தொடர்கிறது.

இந்தநிலையில் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான இந்தியன் ஓவர்சிஸ் வங்கி அடிப்படை வட்டி விகிதத்தை 10 பைசா அளவில் குறைந்து 9.35 சதவீதமாக நிர்ணயித்துள்ளது. தற்போது 9.45 சதவீதமாக உள்ள வட்டி வகிதம் 9.35 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த அடிப்படை வட்டி விகிதத்தை வைத்தே வங்கி கொடுக்கும் கடன் மற்றும் வாங்கும் கடனுக்கான வட்டி விகிதம் நிர்ணயம் செய்யப்படும். இதனால் வங்கி டெபாசிட்டுகளுக்கு வட்டி விகிதம் குறையும். அதேசமயம் வீட்டுக்கடன் உள்ளிட்ட பிற கடன்களுக்கான வட்டி விகிதமும் குறையும்.

SCROLL FOR NEXT