வணிகம்

7 சதவீத வட்டியில் விவசாய நகைக் கடன்: இந்தியன் வங்கி அறிவிப்பு

செய்திப்பிரிவு

ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உதவும் வகையில், 7% எனும் நிலையான வட்டி வீதத்தில் இந்தியன் வங்கிக் கிளைகளில் நகைக் கடன்கள் வழங்கப்படும்.

அதாவது, ஒரு மாதத்துக்கு ஒரு லட்சத்துக்கு ரூ.583 என்ற வட்டியில்வழங்கப்படும். நகை மதிப்பில் 85% வரை கடனாக கிடைக்கும். ஒரு கிராமுக்கு ரூ.3,745 வரை நிதி வழங்குகிறது. இது தவிர, சிறு, குறு மற்றும்நடுத்த தொழில் நிறுவனங்களுக்கான கடன் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு கடன்களை இந்தியன் வங்கி வழங்கி வருகிறது என அந்த வங்கி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT