வணிகம்

காதி நிறுவனத்தின் பட்டு முகக்கவசம் அறிமுகம்

செய்திப்பிரிவு

காதி நிறுவனத்தின் பட்டு முகக்கவசம் கொண்ட பரிசுப்பெட்டியை குறு, சிறு, நடுத்தரத் தொழில் துறை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிமுகம் செய்து வைத்தார்.

காதி பட்டு முகக்கவசங்கள் கொண்ட அழகிய பரிசுப் பெட்டியை இப்போது நீங்கள் உங்கள் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் பரிசளிக்கலாம். காதி கிராமத்தொழில் ஆணையத்தால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த பரிசுப் பெட்டியை குறு, சிறு ,நடுத்தரத் தொழில்துறை மத்திய அமைச்சர் நிதின்கட்கரி நேற்று அறிமுகம் செய்து வைத்தார்.

ஒரு பரிசுப் பெட்டியில் பல்வேறு வண்ணங்கள், அச்சுக்களுடன் கூடிய கைவேலைப்பாடு கொண்ட 4 பட்டு முகக் கவசங்கள் இருக்கும்.

கருப்பு வண்ணத்தில், பொன்னிறத்தில் அச்சிடப்பட்ட, கைகளால் தயாரிக்கப்பட்ட கண்ணைக் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்ட காகிதப் பெட்டிக்குள் இந்த முகக் கவசங்கள் வைக்கப்பட்டிருக்கும்.

பாதுகாப்பை உறுதிப்படுத்தும் அதேசமயம், விழாக்கால உணர்வைக் கொண்டாடும் வகையிலான தகுந்த ஒரு பொருளாக இந்தப் பரிசுப்பெட்டி உள்ளது என்று கட்கரி பாராட்டினார்.

காதி கிராமத்தொழில் ஆணையம் மேற்கொண்ட முகக்கவசத் தயாரிப்பு முயற்சிக்குப் பாராட்டு தெரிவித்த அவர், கரோனா பெருந்தொற்று நிலவும் கடினமான காலத்தில், கலைஞர்களுக்கு, தொடர்ந்து வாழ்வாதாரம் கிடைக்க இது வகை செய்கிறது என்றும் அவர் கூறினார்.

SCROLL FOR NEXT