வணிகம்

என்டிபிசி மின் உற்பத்தி இதுவரை இல்லாத அளவு உயர்வு

செய்திப்பிரிவு

தேசிய அனல் மின் உற்பத்தி நிறுவனத்தின், ஒருநாள் உற்பத்தி முன்னெப்போதும் இல்லாத அளவான 977.07 மில்லியன் யூனிட்டை எட்டியது.

மத்திய மின்சக்தி அமைச்சகத்தின் பொதுத்துறை நிறுவனமான தேசிய அனல் மின் உற்பத்தி நிறுவனம், இம்மாதம் 28-ந் தேதியன்று, ஒருநாள் உற்பத்தியில் அதிகபட்ச அளவான 977.07 மில்லியன் யூனிட்டை எட்டியுள்ளது. இந்த நிறுவனத்தின் துணை மின் நிலையங்கள் மற்றும் ஜேவி நிறுவனங்களின் மின் உற்பத்தியையும் சேர்த்து இந்த உற்பத்தி அளவு எட்டப்பட்டுள்ளது.

ஜூலை 28-ந் தேதியன்று, சத்தீஸ்கரில் உள்ள கோர்பா, சைபட், லாரா மின் நிலையங்களும், ஒடிசாவில் உள்ள தல்ச்சர் கனிஹா மற்றும் இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள கோல்டம் மின் நிலையங்களும் 100 சதவீத உற்பத்தியை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு, ஒருநாளைய அதிகபட்ச அளவு, 2019 மார்ச் 12-ல் எட்டப்பட்டது, அன்று 935.46 மில்லியன் யூனிட் மின் சக்தி உற்பத்தி செய்யப்பட்டது.

SCROLL FOR NEXT