ஏப்ரல், ஜூன் மாதங்களில் 73.58 லட்சம் தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி கணக்கு கேஓய்சி (KYC) விவரங்களை புதுப்பித்துள்ளது.
கோவிட்-19 தொற்றுநோயைத் தொடர்ந்து முக்கியமானதாக மாறியுள்ள தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி ஆணையத்தின் (EPFO) இணையச் சேவைகள் கிடைக்கும் தன்மை மற்றும் அணுகலை விரிவாக்குவதற்கு, 2020 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலும் 73.58 லட்சம் சந்தாதாரர்களுக்கு உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள் (Know Your Customer KYC) செயல்முறையை புதுப்பித்துள்ளது.
இதில் 52.12 லட்சம் சந்தாதாரர்களுக்கு ஆதார் எண் சேர்ப்பு, 17.48 லட்சம் சந்தாதாரர்களுக்கு மொபைல் எண் சேர்ப்பு ( UAN செயல்படுத்தல்) மற்றும் 17.87 லட்சம் சந்தாதாரர்களுக்கு வங்கிக் கணக்கு சேர்ப்பு ஆகியவை அடங்கும். KYC என்பது ஒரு முறை செயல்முறையாகும், இந்த KYC விவரங்களுடன் யுனிவர்சல் கணக்கு எண் (UAN) ஐ இணைப்பதன் மூலம் சந்தாதாரர்களின் அடையாள சரி பார்ப்புக்கு உதவுகிறது.
மேலும், KYC சேர்ப்பை இவ்வளவு பெரிய அளவில் செயல்படுத்த, ஊரடங்கு கால கட்டத்தில் கூட சந்தாதாரர்களின் புள்ளி விவர விவரங்களை திருத்துவதற்கான பெரும் முயற்சியை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம் (EPFO) மேற்கொண்டுள்ளது. இதன் விளைவாக 2020 ஏப்ரல்-ஜூன் மாதங்களில் 9.73 லட்சம் பெயர் திருத்தங்கள், 4.18 லட்சம் பிறப்பு தேதி திருத்தங்கள் மற்றும் 7.16 லட்சம் ஆதார் எண் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.