கடற்படையின் மிகப்பெரிய அளவிலான சூரியசக்தி ஆலை தொடங்கி வைக்கப்பட்டது.
இந்தியக் கடற்படையின் மூன்று மெகாவாட் திறன் கொண்ட சூரிய சக்தி மின் ஆலையை 22 ஜூலை 2020 அன்று எரிமலையில் எழிமலா இந்திய கடற்படை அகடமியில் வைஸ் அட்மிரல் அனில்குமார் சாவ்லா காணொலி மூலமாக துவக்கி வைத்தார்.
2022ஆம் ஆண்டுக்குள் 100 ஜிகாவாட் சூரியசக்தித் திறனை அடைய வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டு மத்திய அரசின் தேசிய சூரியசக்தி இயக்கத்தின் முயற்சியின் ஒரு பகுதியாகும் இது.
இந்தியக் கடற்படையிலேயே மிகப்பெரிய அளவிலான சூரியசக்தி மின் ஆலையாகும் இது. இதனுடைய பயனுள்ள காலம் சுமார் 25 ஆண்டுகள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மிக அதிக செயல்திறன் கொண்ட 9180 மோனோ கிறிஸ்டலைன் சூரியசக்தி பேனல்கள் உட்பட அனைத்து உதிரி பாகங்களும் உள்நாட்டிலேயே பெறப் பெற்றவை. நவீன தொழில் நுட்பத்துடன் கூடியவை. இந்தத் திட்டத்தை கேரள மாநில மின்னணு வளர்ச்சிக் கழகம் கெல்ட்ரான் நிறுவனம் செயல்படுத்தியுள்ளது.
கோவிட் கட்டுப்பாடுகள் மற்றும் மழைக்காலப் பருவநிலை நிலவிய போதும் கேரள மாநில மின்வாரியம் உட்பட சம்பந்தப்பட்ட அனைத்துத் துறைகளும் இந்தத் திட்டம் தொடர்பான அனைத்துப் பணிகளையும், கோவிட் விதிமுறைகள் அனைத்தையும் பின்பற்றி, உரிய காலத்தில் பணிகளை நிறைவு செய்தனர்.
எழிமலாவிலுள்ள கடற்படைத் தளத்தில் கரியமிலவாயு குறைவதற்கு இந்த சூரியசக்தி ஆலைத்திட்டம் பெரிதும் உதவும்.
கரியமில வாயுவைக் குறைப்பதற்கான பல்வேறு முயற்சிகளில் இதுவும் ஒன்றாகும்.