அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டல நிறுவனம், கிருஷ்ணப்பட்டினம் துறைமுக நிறுவனத்தை கையகப்படுத்த சிசிஐ ஒப்புதல் அளித்துள்ளது.
கிருஷ்ணப்பட்டினம் துறைமுக நிறுவனத்தை, அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டல நிறுவனம் கையகப்படுத்த, இந்திய போட்டியியல் ஆணையம் (சிசிஐ) ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த இணைப்பின் வாயிலாக கிருஷ்ணப்பட்டினம் துறைமுக நிறுவனத்தின் பங்குகளைப் பெறுவதுடன், நிர்வாகக் கட்டுப்பாட்டையும் அதானி துறைமுகங்கள் நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது. இது தொடர்பான விரிவான ஆணையை சிசிஐ வெளியிட உள்ளது.