‘‘கரோனா வைரஸ் தொற்று காரணமாக தொழில் துறை முற்றிலுமாக முடங்கியுள்ளது. எனினும் இதிலிருந்து மீண்டு பழைய நிலையை எட்டும் அளவுக்கு இந்திய தொழில்துறை வலுவாக உள்ளது’’ என்று ஹெச்எஸ்பிசி அறிக்கை தெரிவித்துள்ளது.
கரோனா ஊரடங்கு பாதிப்பு ஓரளவு தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தாலும் அதில் இருந்து மீண்டு எழும் அளவுக்கு இந்திய தொழில்கள் தங்களை தயார் படுத்தி வருவதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. 14 முன்னணி நாடுகளில் 2,600 நிறுவனங் களிடம் இதுதொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 200 இந்திய நிறுவனங்கள் இடம்பெற்றி ருந்தன.
ஹெச்எஸ்பிசி நேவிகேட்டர் நடத்திய ஆய்வில் ஏறக்குறைய 46 சதவீத இந்திய நிறுவனங்கள் மிகவும் கடுமையாகப் பாதிக் கப்பட்டுள்ளன. 56 சதவீத நிறு வனங்கள் தற்போதைய சூழ் நிலையை எதிர்கொண்டு அதில் இருந்து வெளிவருவதற்கான ஆயத்த நிலையை மேற் கொண்டு வருகின்றன.
பிற நாட்டு நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் இந்திய நிறு வனங்கள் 2-வது இடத்தில் உள் ளன. இது சராசரி அளவை விட (45%) அதிகமாகும். கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் சுமார் 29 சதவீத தொழில் நிறு வனங்கள் கடுமையாக பாதிக் கப்பட்டிருந்தாலும் தற்போது இயல்பாக செயல்படத் தொடங்கி உள்ளன. இதுவும் சர் வதேச அளவுடன் ஒப்பிடுகையில் அதிகமாகும். சீன சந்தைக்கு அடுத்த இடத்தில் இந்திய நிறுவனங்களின் செயல்பாடுகள் உள்ளதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
கரோனா வைரஸ் பரவல் பெரும்பாலான நாடுகளின் பொருளாதாரத்தை வெகுவாக பாதித்துள்ளது. இதன் காரண மாக தொழில் நிறுவனங்கள் அடுத்தகட்ட நகர்வுக்கு தங்களை தயார்படுத்தி வருகின்றன. புதிய வாழ்வியல் (நியோ நார்மல்) நடைமுறைக்கு தங்களை தக வமைத்து எதிர்காலத்தை திட்ட மிடுகின்றன என்று ஹெச்எஸ்பிசி இந்தியா வர்த்தக வங்கி தலைவர் ரஜத் வர்மா தெரிவித்துள்ளார்.
இந்திய தொழில் நிறுவனங் களில் 73 சதவீதம் தற்போது வழக்கமான செயல்பாடுகளைத் தொடங்கியுள்ளன. இவை பெரும்பாலும் போதுமான நிர் வாகவியல் நடைமுறைகளோடு வலுவாக செயல்படத் தொடங்கி யுள்ளன. புதிதாக உருவாகி யுள்ள சூழலுக்கேற்ப தங்களது செயல்பாடுகளை அட்ஜெஸ்ட் செய்து கொண்டு இவை செயல் படுவதாக அறிக்கை தெரிவிக் கிறது. இந்திய நிறுவனங்களில் 2 சதவீத நிறுவனங்கள் மட்டுமே எதிர்கால செயல்பாடு அதாவது சந்தையில் நிலைத்திருப்பது கேள்விக்குறியாக உள்ளதாக தெரிவித்துள்ளன.
தங்களுக்கு பொருள் விநி யோகம் செய்யும் சப்ளை நிறு வனங்களின் செயல்பாடுகளைப் பொறுத்தே அமையும் என்று தெரிவித்துள்ளன. 64 சதவீத நிறு வனங்கள் தற்போது உருவான சூழலை எதிர்கொள்ளும் வகை யில் பல ஆரோக்கியமான மாற் றங்களை தங்களது பொருள் தயாரிப்பிலும், தாங்கள் அளிக் கும் சேவையிலும் மேற்கொண் டுள்ளன.
இதுவும் இந்திய நிறு வனங்களிடையே காணப்படும் மிகச் சிறப்பான அம்சமாகும். இந்த விஷயத்திலும் இந்திய நிறுவனங்கள் மிகச் சிறப்பான வையாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.புதிய வாழ்வியல் (நியோ நார்மல்) நடைமுறைக்கு தங்களை தகவமைத்து எதிர்காலத்தை திட்டமிடுகின்றன.