வணிகம்

பயர்பாக்ஸ் நிறுவனத்தை வாங்கியது ஹீரோ

பிடிஐ

உயர் விலையிலான சைக்கிள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள பயர் பாக்ஸ் நிறுவனத்தை ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.

பயர்பாக்ஸ் நிறுவனர் தன் வசம் இருந்த அனைத்து பங்குகளையும் ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனத்திடம் ரொக்க பரிவர்த்தனையின் அடிப்படையில் கொடுத்ததாக நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

பயர்பாக்ஸ் நிறுவனம் தொடர்ந்து உயர் விலையிலான சைக்கிள் தயாரிப்பில் அதே பிராண்டு பெயரில் தயாரித்து விற்பனை செய்யும். ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனம் வழக்கம் போல செயல்படும் என அறிக்கையில் தெரிவிக் கப்பட்டுள்ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT