தொழில் துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுக்கான துறையின் பொருளாதார ஆலோசகர் அலுவலகம், 2020 ஜூன் மாதத்திற்கான (தற்காலிகமானது) மொத்த விலை குறியீட்டு எண்ணையும், 2020 ஏப்ரல் மாதத்திற்கான இறுதி குறியீட்டு எண்ணையும் வெளியிட்டுள்ளது.
2020 ஜூன் மாதத்திற்கான மொத்த விலை குறியீட்டு எண் அடிப்படையில் வருடாந்திர பணவீக்க விகிதம் -1.81சதவீதம் (தற்காலிகமானது) ஆகும். கடந்த ஆண்டு இதே மாதத்தில் இது 2.02 சதவீதம் இருந்தது குறிப்பிடத்தக்கது.
அனைத்து சரக்குகளுக்குமான மொத்த விலை குறியீட்டு எண் 2020 ஜூனில் 119.3 ஆகவும், முதன்மைப் பொருட்களுக்கு 139.3 ஆகவும், எரிபொருள் மற்றும் மின்சக்திக்கு 88.3, உற்பத்திப் பொருட்களுக்கு 118.6, உணவுக்கான மொத்த விலை குறியீட்டு எண் 148.6 ஆகவும் இருந்தது.
2020 ஏப்ரல் மாதத்திற்கான இறுதி மொத்த விலை குறியீட்டு எண் 119.2 ஆகவும், அனைத்து சரக்குகளுக்கான பணவீக்க விகிதம்.