கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப் படுத்த நாடு முழுவதும் அமல் படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டுள்ளது. இதன் விளைவாக பல்வேறு துறை களில் ஊழியர்களை நியமிக்கும் நடவடிக்கைகள் ஜூன் மாதத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பணியாளர் தேர்வு 33 சதவீத அளவுக்கு அதிகரித்துள்ளதாக சமீபத்தில் வெளியான புள்ளிவிவர அறிக்கை தெரிவிக்கிறது.
நௌக்ரி ஜாப்ஸ்பீக் குறியீடு ஜூன் மாதத்தில் 33 சதவீதம் 1,208 புள்ளிகளாக உயர்ந்துள்ளது. இது மே மாதத்தில் 910 புள்ளிகளாக இருந்தது. எனினும் ஆண்டுக்கு ஆண்டு பணியாளர்களை தேர்வு செய்வது 44 சதவீத அளவுக்கு குறைந்து வருகிறது.
வேலைவாய்ப்பு இணையதள நிறுவனமான நௌக்ரி ஜாப்ஸ்பீக் மாதாந்திர குறியீடு, நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான பணி யாளர் விவரங்களை இந்நிறுவன இணையதளத்தில் பட்டியலிடு வதன் அடிப்படையில் கணக்கிடப் படுகிறது. ஹோட்டல், சில்லரை வர்த்தகம், ஆட்டோமொபைல் துறை களில் பெருமளவு ஊழியர்கள், ஊரடங்கு காரணமாக வேலை யிழந்தனர். இப்போது இத்துறை களில் ஊழியர்களை பணியில் எடுக் கும் நடவடிக்கை அதிகரித்துள்ளது.