சீனாவிடம் இருந்து சைக்கிள் உற்பத்திக்கான உபகரணங்களை வாங்கிக் கொண்டிருந்த நிலையில் ஹீரோ சைக்கிள் நிறுவனம் தற் போது உள்நாட்டிலேயே அதற் கான உபகரணங்களை உருவாக் கிக் கொள்ள திட்டமிட்டிருக்கிறது.
இதுகுறித்து ஹீரோ சைக்கிள் நிறுவனத்தின் தலைவர் பங்கஜ் முஞ்சால் கூறியதாவது:
இந்த முடிவை ஆழமாக திட்டமிட்டே எடுத்திருக்கிறோம். சீனா உட்பட பிற நாடுகளில் இருந்து சைக்கிள்களுக்கான உபகரணங்களை இறக்குமதி செய்து கொண்டிருந்தோம். தற்போது உபகரணங்களை ஜெர்மனில் உள்ள எங்களது ஆராய்ச்சி நிலையத்தில் டிசைன் செய்ய முடிவு செய்துள்ளோம் அதன்பிறகு அவற்றை உள்நாட்டி லேயே தயார் செய்ய உள்ளோம். படிப்படியாக சுயசார்பை நோக்கி முழுமையாக நகர முடிவு செய்துள்ளோம். இதன் காரணமாக சீனாவுக்கு வழங்கியிருந்த ரூ.900 கோடி அளவிலான ஆர்டர் களைத் திரும்பப் பெற்று இந்தியாவிலேயே அவற்றை உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு பங்கஜ் முஞ்சால் கூறினார்.