வணிகம்

ஒற்றைச்சாளர முறையில் தொழில் தொடங்க அனுமதி

செய்திப்பிரிவு

இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகை யில், தமிழகத்தில் மட்டுமே ஒற்றைச்சாளர முறையில் தொழில் தொடங்க அனுமதி வழங்கப் படுவதாக ஊரகத் தொழில்துறை அமைச்சர் ப.மோகன் பெருமிதத் துடன் கூறினார்.

சிறு, குறு நடுத்தர தொழில்கள் பற்றிய கருத்தரங்கில் அவர் கூறியதாவது; மாநில அளவில் தலைமைச் செய லாளர் தலைமையிலும், மாவட்ட அளவில் அந்தந்த ஆட்சியர்கள் தலைமையிலும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் தொழில் தொடங் குவதற்கான அனுமதி ஒரு மாதத்திற்குள் அளிக்கப்படுகிறது.

சிறு, நடுத்தர தொழில்களில் மட்டும் கடந்த 4 ஆண்டுகளில் 4 லட்சத்து 77 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு முதலீட்டு மானியமாக 6 ஆயிரத்து 440 நிறுவனங்களுக்கு ரூ.279 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. என்று அமைச்சர் மோகன் கூறினார்.

SCROLL FOR NEXT