வணிகம்

சிறு, குறு தொழில்கள் பதிவுக்கான புதிய நடைமுறை ‘உதயம் பதிவு’-  இன்று முதல் அமல்

செய்திப்பிரிவு

குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் பதிவுக்கான புதிய நடைமுறையானது உதயம் பதிவு என்ற பெயரில் இன்று முதல் அமலுக்கு வருகிறது.

குறு, சிறு, நடுத்தரத் தொழில்களுக்கான மத்திய அமைச்சகம் 22 ஜுன் 2020 தேதியிட்ட தனது அறிவிக்கையில் ஏற்கெனவே தெரிவித்துள்ள படி தொழிற்சாலைகளை வகைப்படுத்தி பதிவு செய்கின்ற புதிய நடைமுறையானது 1 ஜுலை 2020இல் இருந்து தொடங்குகிறது.

இந்த நோக்கத்துக்காக ஒரு தொழிற்சாலை உதயம் என்ற பெயரில் அழைக்கப்படும் மற்றும் பதிவுக்கான நடைமுறை ”உதயம் பதிவு” என்று அழைக்கப்படுகிறது. நடைமுறையின் முக்கியமான அம்சங்கள்:

· குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் பதிவு நடைமுறை முழுவதும் ஆன்லைனில் காகிதப்பயன்பாடு இல்லாமல் சுயஉத்தரவாதத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும். ஒரு குறு, சிறு, நடுத்தரத் தொழிலகத் தொழிற்சாலையைப் பதிவு செய்வதற்காக எந்த ஒரு ஆவணத்தையோ அல்லது ஆதாரத்தையோ பதிவேற்றம் செய்ய வேண்டிய தேவை இல்லை.

· பதிவு செய்வதற்கு ஆதார் எண் தேவை

· பதிவு செய்த பிறகு பதிவு எண் வழங்கப்படும்.

· பதிவு செய்யும் நடைமுறைகள் முடிவடைந்த பிறகு, உதயம் பதிவு சான்றிதழ் வழங்கப்படும்.

· இந்தச் சான்றிதழில் டைனமிக் கியூ.ஆர் கோட் இருக்கும். இதன் மூலம் அமைச்சகத்தின் போர்ட்டலில் உள்ள இணைய பக்கத்தையும் அந்த தொழிற்சாலை குறித்த விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.

· பதிவைப் புதுப்பிக்க வேண்டிய தேவை இல்லை

· நிரந்தரக் கணக்கு எண் மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி இணைக்கப்பட்ட தொழிற்சாலைகளின் முதலீடு மற்றும் ஆண்டுத்தொழில் தொகை குறித்த விவரங்கள் சம்பந்தப்பட்ட அரசு தரவுத்தொகுப்பில் இருந்து தானாகவே எடுத்துக் கொள்ளப்படும்.

· குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் அமைச்சகத்தின் ஆன்லைன் சிஸ்டமானது வருமான வரி மற்றும் ஜி.எஸ்.டி.ஐ.என் அமைப்புகளுடன் முற்றாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

· குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் அமைச்சகத்தின் கீழ் எந்த ஒரு அதிகாரியும் வழங்கி உள்ள இ.எம்-II அல்லது யு.ஏ.எம் பதிவு அல்லது

வேறெந்த பதிவையோ வைத்துள்ளவர்கள் தாங்களாகவே மீண்டும் பதிவு செய்தாக வேண்டும்.

· எந்த ஒரு தொழிற்சாலையும் ஒரு உதயம் பதிவுக்கு மேல் பதிவு செய்யக் கூடாது. ஆனால் ஒரே பதிவில் உற்பத்தி அல்லது சேவை அல்லது இரண்டும் உள்ளடக்கிய பல்வேறு நடவடிக்கைகளைக் குறிப்பிடலாம் அல்லது சேர்த்துக் கொள்ளலாம்.

· அரசின் உதவி இயக்குமுறையானது ஒற்றைச் சாளர அமைப்பு என்ற பெயரில் சாம்பியன் கட்டுப்பாட்டு அறையில் மேற்கொள்ளப்படுகிறது. மாவட்டத் தொழில் மையத்தில் இந்த நடைமுறைக்காக பொதுமக்களுக்கு உதவிகள் வழங்கப்படும்.

· பதிவு நடைமுறை அனைத்தும் இலவசம். இது தொடர்பாக எந்த விதமான கட்டணமும் இல்லை, செலவும் இல்லை.

இந்த நடைமுறையானது மிக எளிமையானதாக, சிரமமில்லாததாக, தொழில் முனைவோருக்கு உதவுவதாக இருக்கும் என்று அமைச்சகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இந்தியாவில் மட்டுமல்லாமல் சர்வதேச அளவிலும் எளிமையாக வர்த்தகம் மேற்கொள்ளுதல் என்பதற்கான ஒரு உதாரணமாக இது விளங்கும்.

SCROLL FOR NEXT