வணிகம்

`தகவல் தொழில்நுட்பத்தில் எதுவும் நிலையானது அல்ல’- ஷிவ் நாடார் சிறப்பு பேட்டி

வாசு கார்த்தி

சர்வதேச முதலீட்டாளர் மாநாடு சென்னையில் இரண்டு நாட் களுக்கு முன்பு முடிந்தது. பல நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்குவதாக தெரிவித் திருக்கின்றன. மென் பொருள் துறையைச் சேர்ந்த ஹெச்சிஎல் நிறுவனம் தென் தமிழகத்தில் முதலீடு செய்யப் போவதாக அதன் நிறுவனர் ஷிவ் நாடார் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து கூடுதல் தகவல் அறிய அவரைத் தொடர்பு கொண்ட போது, உத்திரபிரதேசத்தில் உள்ள ஷிவ்நாடார் அறக்கட்டளை பள்ளியில் இருந்தார். அவருடன் நடத்திய தொலைபேசி உரை யாடலிலிருந்து...

இப்போது தொழில்முனைவு என்பது சாதாரணமாக இருக்கிறது. 1976களில் எப்படி நிறுவனம் தொடங்கினீர்கள்?

கொஞ்சம் எங்களது எண்ணங் கள் என்றால் அதற்கேற்ற சூழ்நிலை யும் முக்கிய காரணம். முதலாவது என்னைப் போலவே தொழில் தொடங்க வேண்டும் என்ற ஒரு மித்த சிந்தனை உடைய நண்பர்கள் கிடைத்தார்கள். அனைவரும் டிசிஎம் நிறுவனத்தில் பணிபுரிந்துவந் தோம். அனைவருக்கும் தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அப்போது அதற்கான தேவையும் இருந்தது. நாங்கள் நிறுவனம் தொடங்கிய நேரத்தில் அப்போதைய அரசியல் சூழ்நிலை காரணமாக ஐபிஎம் போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் செயல்பட முடியவில்லை. ஆப்பிள் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு ஏற்றுமதி செய்தோம்.

நீங்கள் தென் தமிழகத்தில் பிறந்தவர். ஆனால் வட மாநிலத்தில் தொழில் தொடங்கியது ஏன்?

இங்கு பிறந்திருந்தாலும் பணி புரிந்தது வட இந்தியாவில்தான். தவிர நான் மட்டும்தான் தமிழகத் தைச் சேர்ந்தவன். என்னுடைய நண்பர்கள் அனைவரும் வட இந்தியர்கள். நிறுவனம் தொடங்கும்போது எனக்கு திருமணம் ஆகி இருந்தது. அவரும் வட இந்தியர் என்பதால் அங்கேயே நிறுவனம் தொடங்க வேண்டியதாயிற்று.

உங்களை போன்ற ஹார்டுவேர் நிறுவனங்கள் ஆரம்பத்தில் பல இருந் தன. மென்பொருள் நிறுவனமாக மாறிய சில நிறுவனங்களில் உங்க ளுடையதும் ஒன்று. மென்பொருளில் தான் வளர்ச்சி இருக்கிறது என்பதை எப்படி கணித்தீர்கள்?

தகவல் தொழில்நுட்பத்தில் எதுவும் நிலையானது அல்ல. சில தொழில்களில் 100 வருடங் கள் கூட மாற்றம் இல்லாமல் இருக்கும். ஆனால் தகவல் தொழில் நுட்பதுறையில் மாற்றங்கள் என்பது தவிர்க்க முடியாது. சந்தையோடு இருந்ததால் இந்த மாற்றம் நடந்தது. ஆரம்பத்தில் ஆப்பிள் கணிப்பொறி தயாரிப்பில் இருந்தார்கள். ஆனால் இப்போது முற்றிலும் வேறுவிதமான சாதனங்களை தயாரிக்கிறார்கள். இன்னும் ஐந்து வருடங்களுக்கு பிறகு கணிப்பொறிக்கு தேவை இருக்குமா என்பது கேள்விக்குறிதான். மொபைல் போன் முற்றிலுமாக கம்ப்யூட்டரின் இடத்தை ஆக்கிரமித்துவிடும். இப்போது தொழில்துறையின் வடிவங்கள் தொடர்ந்து மாறி வருகின்றன. துறை எந்த திசையில் செல்கிறதோ அதே திசையில் பயணிக்க வேண்டும்.

பல நிறுவனங்கள் ஐடி சார்ந்த தொழில் முனைவோர்களை உருவாக்கி வரு கிறது. அதற்காக நிதி ஒதுக்கி செயல் படுத்துகின்றன. இந்த விஷயத்தில் ஹெச்சிஎல் நிறுவனத்தின் நிலைப் பாடு என்ன?

நாங்கள் இது போல எதுவும் செய்வதில்லை. ஆனால் பணியாளர் கள் தங்களுடைய ஐடியாக்களை தெரிவிக்கலாம். அனைத்து ஐடியாக் களும் ஒருங்கிணைக்கப்படும். அதில் சிறந்ததை செயல்படுத்த சர்வதேச அளவில் வாய்ப்புகள் வழங்கப்படும். அதன் பிறகு அவர்கள் தனி நிறுவனமாக செயல்படலாம்.

karthikeyan.v@thetamilhindu.co.in

SCROLL FOR NEXT