வணிகம்

பங்குச் சந்தைகளுக்கு இன்று விடுமுறை

செய்திப்பிரிவு

நேற்றைய வர்த்தகத்தில் இந்திய பங்குச்சந்தைகள் உயர்ந்து முடிந்தன. சென்செக்ஸ் 40 புள்ளிகள் உயர்ந்தும், நிப்டி 22 புள்ளிகள் உயர்ந்தும் முடிந்தன. துறைவாரியாக பார்க்கும் போது தகவல் தொழில்நுட்ப குறியீடு உயர்ந்து முடிந்தது. அதற்கடுத்து, கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ், எப்எம்சிஜி ஆகிய குறியீடுகள் உயர்ந்து முடிந்தன.

வரும் செவ்வாய்க்கிழமை ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைக்கும் என்று பெரும்பாலான வல்லுநர்கள் கணித்திருப்பதால் பங்குச்சந்தை உயர்ந்தன. சென்செக்ஸ் பங்குகளில் லுபின்,கெயில், இன்போசிஸ், பஜாஜ் ஆட்டோ மற்றும் ஐடிசி ஆகிய பங்குகள் உயர்ந்தன.

மாறாக சென்செக்ஸ் பங்குகளில் ஓஎன்ஜிசி, கோல் இந்தியா, டாடா ஸ்டீல், எல் அண்ட் டி மற்றும் டாடா மோட்டார்ஸ் ஆகிய பங்குகள் சரிந்து முடிந்தன. பக்ரீத்தை முன்னிட்டு இன்று (வெள்ளிக்கிழமை) இந்திய பங்குச்சந்தைகளுக்கு விடுமுறை ஆகும்.

SCROLL FOR NEXT