வணிகம்

மின்னணு துறையில் ரூ.1 லட்சம் முதலீட்டு கோரிக்கைகள்: மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு

ஐஏஎன்எஸ்

மின்னணு உற்பத்தித் துறையில் ரூ.1 லட்சம் கோடிக்கான முதலீட்டு அனுமதி கோரிக்கைகள் கடந்த 15 மாதங்களில் அரசுக்கு வந்துள்ளதாக மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கூறினார்.

ஃபிக்கி ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பேசிய அவர், பாஜக அரசு பொறுப்பேற்றதிலிருந்து இதுவரை அரசுக்கு வந்துள்ள முதலீட்டு வாய்ப்புகள் ரூ. 1,04,000 கோடி யாகும். இவை அனைத்தும் சிறப்பு ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் (எம்எஸ்ஐபிஎஸ்) வந்துள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.

இந்தத் திட்டங்கள் அனைத்துமே 2012-ம் ஆண்டு அனுமதி அளிக்கப்பட்டவை. ஆனால் இவற்றுக்கு 20% சலுகை அறிவிக்கப்பட்டது. அதுவும் இவை அனைத்தும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் (எஸ்இஇஸட்) தொடங்கினால் மட்டுமே இந்த சலுகையைப் பெற முடியும் என்ற நிலை இருந்தது. சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் தவிர்த்து வேறு இடங்களில் தொடங்கினால் 25% சலுகை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பாஜக அரசு பொறுப்பேற்ற பிறகு எஸ்எஸ்ஐபிஎஸ் திட்டத்தின் காலத் தை 5 ஆண்டுகளுக்கு நீட்டித்தது.

இதைத் தொடர்ந்து சமீபத்தில் ஜியோமி, மோட்டரோலா, லெனோவா உள்ளிட்ட நிறுவ னங்கள் ஸ்மார்ட்போன் அசெம் பிளி மையத்தைத் தொடங்க முன் வந்துள்ளன. இவை அனைத் தையும் ஒப்பந்த அடிப்படையில் பாக்ஸ்கான் மற்றும் ஃபிளெக்ஸ்ட் ரானிக்ஸ் நிறுவனங்கள் மேற் கொள்ள உள்ளன என்றார்.

மேக் இன் இந்தியா திட்டம் தற்போது மின்னணு பொருள் உற்பத்தியில் தொடங்கியுள்ளது. இத்துறையின் அமைச்சராக 15 மாதங்களுக்கு முன் பொறுப்பேற்றபோது மின்னணுதுறை யில் 2 கிளஸ்டர்கள் (தொழிற் பேட்டைகள்) மட்டுமே இருந்தன. இப்போது இந்த எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது என்றார்.

டிஜிட்டல் இந்தியா திட்டமானது இத்துறையில் மிகப் பெரிய மாற்றத்தை உருவாக்கி வருகிறது. இப்போது சாதாரண மக்கள் கூட தங்கள் தொழிலுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். பிரதமரின் டிஜிட்டல் இந்தியா திட்டமானது ஏழை மக்களுக்கும் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட புறக்கணிக்கப் பட்டவர்களுக்குமானது என்று அவர் குறிப்பிட்டார்.

டிஜிட்டல் இந்தியா திட்டமானது அரசியல் சாராதது, இதில் எந்தவித சித்தாந்தமும் கிடையாது, மத்திய, மாநில அரசுகளின் குறுக்கீடு அற்றது. இது இந்தியாவின் முன்னேற்றத்துக்கானது என்று அவர் குறிப்பிட்டார்.

SCROLL FOR NEXT