வணிகம்

30,000 பணியாளர்களை நீக்குகிறது ஹெச்.பி

பிடிஐ

ஹியூலெட் பக்கார்ட் (ஹெச்.பி) நிறுவனம் மேலும் 30,000 பணியா ளர்களை நீக்க முடிவெடுத்திருக் கிறது. இந்த வருட ஆரம்பத்தில் 55,000 பணியாளார்களை நீக்கப்போவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது. தவிர நிறுவனத்தை இரண்டாக பிரிக்கவும் முடிவெடுத்திருக் கிறது.

ஹியூலெட் பக்கார்ட் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தில் இருந்து பிரின்டர் மற்றும் பர்சனல் கம்யூட்டர் தொழிலை பிரிக்க முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. ஹெபி எண்டர்பிரைசஸ் நிறுவனம் அரசாங்க பணிகளை செய்யும்.

இந்தப் பணியாளார்களை நீக்குவதன் மூலம் ஆண்டுக்கு 270 கோடி டாலர் மீதமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செலவுகளைக் குறைக்க கடந்த சில வருடங்களாகவே பல நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று நிறுவனத்தின் தலைவர் மெக் விட்மேன் தெரிவித்தார்.

இப்போது நிறுவனத்தில் 3 லட்சத்துக்கும் மேலான நபர்கள் பணிபுரிகிறார்கள். எதிர்பார்க்கப்பட்டதை விட இந்த எண்ணிக்கை அதிகம். பணியாளர்களைக் குறைக்கும் நடவடிக்கை தொடரும் என்றே அமெரிக்காவைச் சேர்ந்த ஐடி துறை வல்லுநர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

வாடிக்கையாளர்களின் தேவை குறைந்ததால் கடந்த சில வருடங்களாகவே ஹெச்பி நிறுவனம் நெருக்கடியில் இருக்கிறது.

1939-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஹெச்பி நிறுவனங்களை கையகப்படுத்தியதில் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளனாது. 2002-ம் ஆண்டு காம்பேக் நிறுவனத்தை 2,500 கோடி டாலர் கொடுத்து வாங்கியது. இடிஎஸ் நிறுவனத்தை 1,400 கோடி டாலர் கொடுத்தும் வாங்கியது. இது தவிர மேலும் சில நிறுவனங்களை கையகப்படுத்தியது. தன்னுடைய சந்தை மதிப்பை 2012ம் ஆண்டு லெனோவா நிறுவனத்திடம் இழந்தது.

2010-ம் ஆண்டு நிறுவனத்தின் நிகர லாபம் 876 கோடி டாலராக இருந்தது. ஆனால் இப்போது (2014) சரிந்து 500 கோடி டாலராக உள்ளது

SCROLL FOR NEXT