வணிகம்

பணப் புழக்கத்தை அதிகரிக்காமல் பொருளாதாரத்தை சரி செய்ய முடியாது: நிதின் கட்கரி ஆதங்கம்

செய்திப்பிரிவு

சந்தையில் பணப் புழக்கத்தை அதிகரிக்காமல் பொருளாதாரத்தை மீண்டும் சரி செய்ய முடியாது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.

கரோனா வைரஸ் உலகளவில் மனிதர்களுக்கு உடல்ரீதியான பாதிப்புகளையும், உயிர்களையும் காவு வாங்கியதோடு மட்டுமல்லாமல் உலகப்பொருாதாரத்தையும் புரட்டிப்போட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய பொருளாதாரத்தை கொண்டுள்ள அமெரிக்கா கூட தனது பொருளாதார செயல்பாட்டை நிறுத்த வேண்டிய நிலைக்கு வந்து லாக்டவுன் அறிவித்தது.

கரோனா ஏற்படுத்திய பொருளாதார பாதிப்பு மனித உயிர்களைக் காட்டிலும் அதிகமாக இருந்து வருகிறது என்று பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரி்விக்கின்றனர். இதனையடுத்து பொருளாதார நடவடிக்கைகளுக்காக வங்கிக் கடன் உட்பட பல்வேறு திட்டங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியதாவது:

‘‘வங்கிகள் தொடர்பானக பிரச்சினையை ஏற்கிறேன். பொருளாதாரத்தில் தேவை மற்றும் விநியோகத்திற்கு பண புழக்கம் மிக முக்கிய பங்காற்றுகிறது. தற்போதைய பொருளாதார சூழலில் பண புழக்கத்தை அதிகரிக்க செய்ய வேண்டும். தொழில் செய்பவர்களுக்கு கடன் கிடைக்க வேண்டும். இதனை செய்யாமல் பொருளாதாரத்தை மீண்டும் சரி செய்ய முடியாது’’ எனக் கூறினார்.

SCROLL FOR NEXT