சுதந்திரத்துக்கு பிறகு சிறந்த கொள்கைகளுடன் கிடைத்த சிறந்த தலைவர் பிரதமர் மோடி என்று நியூஸ்கார்ப் நிறுவனத்தின் தலைவர் ராபர்ட் முர்டாக் தன் னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரி வித்துள்ளார். அதேசமயம் இந்தி யாவில் இன்னும் செய்ய வேண் டியது நிறைய இருக்கின்றன என்றும் அவர் ட்விட் செய்துள்ளார்.
முன்னதாக மீடியா துறை தலைவர்களுடன் மோடி சந்தித்து உரையாடினார். இந்தியாவில் அதிக வேலைவாய்ப்புகளை மீடியா மற்றும் எண்டர்டெயின் மென்ட் துறை உருவாக்கலாம். இந்தியாவில் அதற்கான வாய்ப்பு கள் உள்ளது என்று விவரிக்கப் பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சர்வதேச மீடியாவை கையாளும் 40% சதவீத தலைவர்கள் வந்திருந்தார்கள். நியூஸ்கார்ப் நிறுவனத்தின் தலைவர் ராபர்ட் முர்டாக், ராபர்ட் தாம்சன், 21 சென்சூரி பாக்ஸ் நிறுவனத்தின் ஜேம்ஸ் முர்டாக், ஸ்டார் இந்தியா நிறுவனத்தின் உதய் சங்கர், டிஸ்கவரி கம்யூனி கேஷன்ஸ் நிறுவனத்தின் தலை வர் டேவிட் ஜஸ்லாவ், சோனி எண்டர்டெயின்மென்ட் நிறுவனத் தின் மைக்கேல் லின்டன் உள்ளிட் டோர் கலந்துகொண்டனர்.