வணிகம்

பொருளாதாரச் சூழலைக் கருத்தில் கொண்டு சிறு தொழில் துறையினருக்கு 8 சதவீத வட்டியில் கடன் வசதி: வங்கிகளுடன் மத்திய அரசு ஆலோசனை

செய்திப்பிரிவு

சிறிய தொழில்களுக்கு குறைந்த வட்டியில் கடன் அளிப்பது தொடர்பாக வங்கிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இது நடைமுறைக்கு வரும்போது சிறிய தொழில் நிறுவனங்களுக்கு 7.5 சதவீதம் முதல் 8 சதவீதம் வட்டியில் கடன் கிடைக்கும் என்று மத்திய நிதித் துறை இணை அமைச்சர் அனுராக் தாக்குர் தெரிவித்தார்.

எம்சிசிஐ சம்மேளன உறுப்பினர்கள் மத்தியில் காணொலி காட்சி மூலம் உரையாடிய அமைச் சர் அனுராக் தாக்குர் மேலும் கூறியதாவது:

தற்போதைய இக்கட்டான பொருளாதாரச் சூழலில் தொழில் துறையினருக்கு குறைந்த வட்டியில் கடன் கிடைக்கச் செய்வது மிகவும் அவசியம். மேலும் வங்கிகள் வழங்கும் கடனுக்கு அரசு 100 சதவீத உத்தரவாத மும் அளித்து வருகிறது. இதனால் வங்கிகள் கடன் வழங்குவதில் கால தாமதம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். ஜவுளித் துறையில் உள்ள வரி விதிப்பை குறைப்பது தொடர்பாக நிதி அமைச்சகமும் ஜிஎஸ்டி கவுன்சிலும் பரிசீலித்து வருகிறது.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

ஜவுளித் துறையினருக்கு உள்ளீடு வரி கடன் (இன்புட் டாக்ஸ் கிரெடிட்) சலுகையானது உள்நாட் டில் சிந்தெடிக் பேப்ரிக் ரகங்களுக்கு கிடைக்காத தால் தங்களது மூலதனம் வெகுவாக பாதிக்கப்பட் டுள்ளதாக ஜவுளித் துறையினர் கூறி வருகின் றனர்.

தற்போதைய ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையால் உள்ளீடு வரி கடன் சலுகையை விட அதிக மாக உள்ளதாகவும் இத்துறையினர் நிதி அமைச்சகத்திடம் முறையிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அதைத் தீர்ப்பது குறித்து பரிசீலிப்பதாக அனுராக் தாக்குர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT