இந்திய அஞ்சல்துறை இ-கமார்ஸ் நிறுவனமான எம்விகர்ஷா நிறுவ னத்தோடு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் கிராமப்புறங்களுக்கு இகாமர்ஸ் மற்றும் எம்-காமர்ஸ் சேவைகளை கொண்டு செல்ல முடியும் என நம்புகிறது. இதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் உள்ள தலைமை அஞ்சலகம் மற்றும் துணை அஞ்சலகங்களை எம்விகர்ஷா பயன்படுத்த உள்ளது.
இணையதள வர்த்தக உதவி களை வழங்கிவரும் எம்விகர்ஷா நிறுவனத்தோடு இதற்காக இந்தியா போஸ்ட் நிறுவனம் சமீபத்தில் ஒப்பந்தம் செய்துள்ளது. எம் விகர்ஷா நிறுவனத்தின் முதன்மை செயல்பாட்டு அதிகாரி ஜெயகிருஷ்ணன், இந்தியா போஸ்ட் அதிகாரிகள் முன்னிலை யில் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
கிராமப்புற பகுதிகளில் உள்ள குடிமக்கள் தங்களுக்கு விருப்ப மான பொருட்களுக்கான ஆர்டரை அஞ்சல் அலுவலகம் மூலம் கொடுக்க முடியும். இதற்கான தொழில்நுட்ப உதவிகளை எம்விகர்ஷா ஏற்படுத்தி தரும். செல்போன், தங்க நகைகள், வீட்டு உபயோகப்பொருட்கள், நுகர்வோர் பொருட்கள், பேன் மற்றும் ரீசார்சபிள் லைட்டுகள் போன்றவற்றுக்கான ஆர்டரை இங்கு கொடுக்கலாம்.
இது தொடர்பாக பேசிய எம் விகர்ஷா நிறுவனத்தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி ஜெயகிருஷணன் இந்த திட்டம் மூலம் கிராமப்புற மக்களுக்கு இகாமர்ஸ் மற்றும் எம் காமர்ஸ் சேவைகளை குறித்து புரிதலை ஏற்படுத்தமுடியும்.
மேலும் கிராமப்புற மக்களுக் கான தேவைகள் அறிந்து கொள்ள முடியும், நம்பகம், மற்றும் வாடிக் கையாளர் சேவை இதன் மூலம் தான் இகாமர்ஸ் செயல்பாடுகள் கிராம புறங்களில் வளரும் என்றார்.