வணிகம்

காலாண்டு முடிவுகள்: டாடா பவர், ஐஓசி

செய்திப்பிரிவு

டாடா பவர் லாபம் ரூ.241 கோடி

டாடா பவர் நிறுவனத்தின் ஜூன் காலாண்டு நிகர லாபம் 241 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 111 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டமடைந்தது.

செயல்பாடுகளின் மூலம் கிடைத்த மொத்த வருமானம் 6 சதவீதம் உயர்ந்து 9,234 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 8,707 கோடி ரூபாயாக இருந்தது.

மின்சார தொழிலில் இருந்து கிடைக்கும் வருமானம் 6,802 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் 6,568 கோடி ரூபாயாக இருந்தது.

நிறுவனத்தின் இதர செயல்பாட்டு வருமானம் நான்கு மடங்கு உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் 28 கோடி ரூபாயாக இருந்த இதர வருமானம் இப்போது 123 கோடி ரூபாயாக இருக்கிறது.

ஐஓசி நிகர லாபம் இரு மடங்கு உயர்வு

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் ஜூன் காலாண்டு நிகரலாபம் இரு மடங்குக்கு மேல் உயர்ந்து 6,436 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 2,522 கோடி ரூபாயாக இருந்தது. சுத்திகரிப்பு லாப வரம்பு அதிகரித்ததே நிகர லாபம் உயர காரணமாகும்.

ஒவ்வொரு பேரல் கச்சா எண்ணெய் சுத்திகரிப்புக்கும் 10.77 டாலர் வருமானம் கிடைத்திருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 2.25 டாலர் மட்டுமே வருமானம் கிடைத்தது. 2008-09ம் ஆண்டில் ஒரு பேரலுக்கு அதிகபட்சமாக 16.81 டாலர் கிடைத்தது.

நிறுவனத்தின் மொத்த வருமானம் 19.2 சதவீதம் சரிந்து ரூ.1.01 லட்சம் கோடியாக இருந்தது. கச்சா எண்ணெய் விலை குறைந்ததே இதற்கு காரணமாகும்.

SCROLL FOR NEXT