வணிகம்

கரோனா ஊரடங்கு எதிரொலி; நிறுவனங்களுக்கு அங்கீகாரம், பதிவு செய்ய அவகாசம் நீட்டிப்பு

செய்திப்பிரிவு

கரோனா தொற்று காரணமாக முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மக்களுக்கும், பொருளாதாரத்திலும் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளைக் கருத்தில் கொண்டு, சில நிறுவனங்களுக்கான அங்கீகாரம், பதிவு செய்தல், அறிவிக்கை செய்தலுக்கான புதிய நடைமுறைகள் அமலாக்கத்தை 2020 அக்டோபர் 1 ஆம் தேதி வரையில் ஒத்திவைக்க சி.பி.டி.டி. முடிவு செய்துள்ளது.

கோவிட்-19 தொற்று தாக்குதல் மற்றும் அதன் தொடர்ச்சியான முடக்கநிலை அமல் சூழ்நிலையில் புதிய நடைமுறைகளை வரும் ஜூன் 1 ஆம் தேதியில் இருந்து அமல் செய்வதில் உள்ள பிரச்சினைகள் குறித்து நிதியமைச்சகத்துக்கு நிறைய முறையீடுகள் வந்தன. புதிய நடைமுறைகளை அமல் செய்வதைத் தள்ளிவைக்க வேண்டும் என்று நிறைய கோரிக்கைகளை வந்திருந்தன.

வருமான வரிச் சட்டம் 1961ன் 10(23C), 12AA, 35 மற்றும் 80G பிரிவுகளின் கீழ் அங்கீகாரம், பதிவு செய்தல், அறிவிக்கை செய்யப்பட்ட நிறுவனங்கள் 2020 அக்டோபர் 1 ஆம் தேதியில் இருந்து 3 மாத காலத்துக்குள் தகவல்களை சமர்ப்பிக்க வேண்டும்.

அதாவது 2020 டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், புதிய நிறுவனங்களுக்கான அங்கீகாரம், பதிவு செய்தல், அறிவிக்கை செய்தலுக்கான திருத்தப்பட்ட நடைமுறைகள் 2020 அக்டோபர் 1 ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வரும். இதற்குரிய சட்ட திருத்தங்கள், வரும் காலத்தில் உருவாக்கப்படும்.

SCROLL FOR NEXT