வணிகம்

ஆகஸ்ட் மாதத்தில் ரூ.800 கோடி வெளியேற்றம்

பிடிஐ

நடப்பு ஆகஸ்ட் மாதத்தில் இந்திய சந்தையில் இருந்து 800 கோடி ரூபாயை அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் வெளியே எடுத்திருக்கிறார்கள். இதில் பங்குச்சந்தையில் இருந்து 684 கோடி ரூபாயும், கடன் சந்தையில் இருந்து 143 கோடி ரூபாயும் வெளியே எடுக் கப்பட்டது.

சீனாவின் யூவான் சரிவு, காரணமாக இந்திய ரூபாய் மதிப்பு சரிந்ததும் முதலீடுகள் வெளியேறுவதற்கு ஒரு காரணம் என்று வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். மேலும் ஜிஎஸ்டி மசோதா நிறைவேறாததும் முதலீடு வெளியேறுவதற்கு ஒரு காரண மாகும்.

SCROLL FOR NEXT