வணிகம்

ஃபேஸ்புக் நிறுவனத்துக்குப் பிறகு சில்வர் லேக் நிறுவனம்:  ரிலையன்ஸ் ஜியோவில் பெரிய முதலீடு 

பியூஷ் பாண்டே

தொழில்நுட்ப முதலீட்டில் முன்னணி நிறுவனமான சில்வர் லேக் நிறுவனம் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ தொலைத்தொடர்பு சேவை நிறுவனத்தில் ரூ.5,655.75 கோடி முதலீடு செய்கிறது.

ஈக்விட்டி வேல்யு ரூ. 4.90 லட்சம் கோடியாகும்.

சுமார் 388 மில்லியன் பேருக்கு ரிலையன்ஸ் ஜியோ சேவை வழங்கி வருகிறது. தொடர்ந்து ஜியோ பிளாட்பார்ம்ஸ் நிறுவமனமாகவே செயல்படும்.

“சில்வர் லேக் நிறுவனத்தை ஒரு மதிப்பு மிக்க பார்ட்னராக இணைத்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம். உலக அளவில் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் மதிப்பு மிக்க பார்ட்னராக சில்வர் லேக் திகழ்ந்து வருகிறது. தொழில்நுட்பம் மற்றும் நிதித்துறையில் சில்வர் லேக் ஒரு மதிக்கப்படக்கூடிய ஒரு குரலாகும். இந்திய டிஜிட்டல் சமூகத்தின் உருமாற்றத்துக்கு சில்வர் லேக் பங்களிப்பு மிகப்பெரிய அளவில் பயன்படும்” என்று முகேஷ் அம்பானி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

மும்பைப் பங்குச்சந்தையில் திங்களன்று ரிலையன்ஸ் பங்குகள் 1.4% குறைந்து ரூ.1,446.45 என்ற விலையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT