வணிகம்

யூடிஐ மியூச்சுவல் பண்ட் கையாளும் தொகை ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டியது

பிடிஐ

நாட்டின் பழமையான மியூச்சுவல் பண்ட் நிறுவனமான யூடிஐ மியூச்சுவல் பண்ட், கையாளும் சொத்து மதிப்பு ஒரு லட்சம் கோடி ரூபாயைத் தாண்டி உள்ளது. மேலும் சிறிய நகரங்களிலும் முதலீட்டாளர்களை சென்றடையும் பணியை செய்வதாக இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் லியோ பூரி தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது:

எங்கள் நிறுவனத்துக்கு ஒரு பாரம்பரியம் இருக்கிறது. நாடு முழுவதும் மியூச்சுவல் பண்ட் கணக்கு வைத்திருப்பவர்கள் எண்ணிக்கை 4.5 கோடியாக உள்ளது. இதில் எங்களது வாடிக் கையாளர்கள் மட்டும் 1 கோடி ஆகும். ஒட்டுமொத்த சந்தையில் எங்களுடைய பங்கு 20 சதவீத அளவில் இருக்கிறது.

இப்போது நம் நாட்டு மக்கள் தொகையில் 2 முதல் 3 சதவீதம் பேர் மட்டுமே மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்கிறார்கள். இந்த எண்ணிகையை இரட்டிப்பாக்கி னால் கூட அதிக மக்களிடம் கொண்டு சேர்க்க முடியாது.

முதலீட்டாளர்கள் ஆன் லைனில் முதலீடு செய்வது அதிகரித்து வந்தாலும், நேரடி விற்பனை முறைக்குதான் நாங்கள் அதிக நேரம் ஒதுக்குவதுடன் முதலீடும் செய்கிறோம். அப்போதுதான் அதிக மியூச்சுவல் பண்ட் திட்டங்களை அதிக மக்களுக்கு கொண்டுபோய் சேர்க்க முடியும்.

இப்போது இருக்கும் ஓய்வூதிய திட்டங்களில் எங்களுக்கு மிகப்பெரிய வாய்ப்புகள் உள்ளன. இப்போதில் இருந்து அடுத்த 3-4 வருடங்களில் என்னவாக இருப்பீர்கள் என்று கேட்டால் ஓய்வூதியத் துறையில் முன்னணி இடத்தில் இருப்போம்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டு முதலீட்டை திரட்டுவதில் நாங்கள் முன்னோடி யாக இருந்தோம்.

ஆனால் அடுத்தடுத்த வருடங்

களில் அதில் கவனம் செலுத்த வில்லை. இப்போது அந்தப் பிரிவிலும் கவனம் செலுத்த இருக்கிறோம் என்றார்.

யூடிஐ மியூச்சுவல் பண்ட் நிறுவனம் பங்குச் சந்தையில் நுழைய (ஐபிஓ வெளியிட) தயாராகி வருகிறது. மியூச்சுவல் பண்ட் துறை சார்ந்த ஒரு நிறுவனம் ஐபிஓ வெளியிட இருப்பது இதுவே முதல் முறை ஆகும்.

SCROLL FOR NEXT