வணிகம்

20 இரும்பு தாது சுரங்கங்கள் ஏலம்: மத்திய அரசு திட்டம்

ராய்ட்டர்ஸ்

இந்த ஆண்டு 20 முக்கியமான இரும்புத் தாது சுரங்கங்களை ஏலம் விட மத்திய அரசு திட்டமிட் டுள்ளது. இதுபோல இரும்புத் தாது சுரங்கங்களை அரசு ஏலம் விட்டது கிடையாது. முதல் முறையாக நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விட்டதைப் போல இரும்புத் தாது சுரங்கத்தையும் ஏலம் விட அரசு திட்டமிட்டுள்ளது.

கனிம வள சுரங்கங்களில் நடை பெறும் ஊழலை ஒழிப்பதற்காக இத்தகைய நடவடிக்கையை அரசு எடுக்க உள்ளதாகத் தெரிகிறது. முறையற்ற முறையில் சுரங்கங் களை ஒதுக்கீடு செய்வதாக புகார் எழுந்தவாறு உள்ளது. மேலும் அரசுக்கு உரிய வருமானம் கிடைக் காமல் முறையற்ற வகையில் தனியாரே கனிமவளங்களை சூறையாடும் போக்கு நீடிக்கிறது. இதைப் படிப்படியாக மாற்றும் நோக்கில் இரும்புத் தாது சுரங்கங்களை ஏலம் விட அரசு முடிவு செய்துள்ளது.

இரும்புத் தாது சுரங்கங்களை ஏலம் விடுவதால் உடனடியாக உற்பத்தி அதிகரித்து விடாது. இருப் பினும் 2025-ம் ஆண்டில் 30 கோடி டன் இரும்பு உற்பத்தி இலக்கை எட்டுவதற்கும், இரும்புத் தாதுவுக் காக பெருமளவு வெளிநாடுகளை நம்பியிருப்பதைத் தவிர்க்கவும் இந்த நடவடிக்கை உதவும் என அரசு கருதுகிறது.

பொதுவாக பெரும்பாலான மாநிலங்கள் தாது உற்பத்தி நடவடிக்கையை அக்டோபர், நவம்பர் மாதங்களில் தொடங்கும். எனவே அந்த சமயத்தில் ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுரங்கத்துறைச் செயலர் பல்வீந்தர் குமார் தெரிவித்துள்ளார்.

முதல் கட்டமாக 80 சுரங்கங் கள் ஏலம் விட முடிவு செய்யப் பட்டுள்ளது. இதில் சுண்ணாம்புக் கல், தங்கம் மற்றும் 20 முக்கிய மான இரும்புத் தாது சுரங்கங்கள் அடங்கும் என்று அவர் கூறினார்.

கடந்த நிதிஆண்டில் இந்தியா வின் இரும்புத் தாது உற்பத்தி 13 கோடி. 15 லட்சம் டன் இரும்புத் தாது இருந்தால் மட்டுமே ஒரு டன் இரும்பு உற்பத்தி செய்ய முடியும். இந்தியாவிலுள்ள உருக்கு நிறுவனங்களுக்கு போதுமான அளவுக்கு இரும்புத் தாது கிடைக்க வேண்டுமானால் இப்போதைய உற்பத்தியைக் காட்டிலும் 10 மடங்கு கூடுதலாக கிடைக்க வேண்டும். அப்போதுதான் அவை சுய சார்பை எட்டும். கர்நாடக மாநிலத்தில்தான் உயர் தர இரும்புத் தாது சுரங்கங்கள் உள்ளன. இங்கு கிடைக்கும் இரும்புத் தாது மூலம் ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் நிறுவனம் பெருமளவு பயனடைகிறது.

உள்நாட்டு உற்பத்தி போதுமான அளவுக்கு இல்லாததால் கடந்த ஆண்டு 1.5 கோடி டன் அளவுக்கு இரும்புத் தாது இறக்குமதி செய்யப் பட்டது. சுரங்கப் பணி நடைபெற குறைந்தபட்சம் 3 ஆண்டுகளா கிறது. சுற்றுச் சூழல், வனத்துறை மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றின் ஒப்புதலைப் பெற வேண்டியுள்ளது.

சுரங்கங்களை ஏலம் விடுவது தொடர்பான அரசின் புதிய சட்டத்தின் காரணமாக தென் கொரியாவைச் சேர்ந்த போஸ்கோ நிறுவனம் 10 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்க ஒப்புக் கொண்ட போஸ்கோ ஆலை திட்டத்தைக் கைவிட்டுள்ளது.

போஸ்கோ வெளியேறியது பிரதமரின் கனவுத் திட்டங்களில் ஒன்றான மேக் இன் இந்தியா திட் டத்தை எட்டுவதில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் தனி ஒரு நிறுவனத்துக்காக விதிகளை மாற்ற முடியாது என்று குமார் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT