இணைய சமநிலை குறித்து பொது மக்கள் கருத்துகளை தெரிவிப்பதற் கான கால அவகாசம் நீட்டிக்கப் பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 20-ம் தேதி வரை கருத்துகள் தெரிவிக் கலாம் என்று மத்திய அரசு அறிவித் துள்ளது. அதன்பிறகு இதற்கான கொள்கை வகுக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித் திருக்கிறது.
இதற்கு முன்பு ஆகஸ்ட் 14 வரை கருத்துகள் தெரிவிக்குமாறு மத்திய அரசு தெரிவித்திருந்தது. இறுதி தினத்தில் அதிகமான கருத்துகள் வந்ததால் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தலைமையிலான குழுவுக்கு ஆகஸ்ட் 14-ம் தேதிக்கு முன்பாக 700 கருத்துகள் மட்டுமே வந்திருந்தன. ஆனால் இறுதிநாளில் 33,600 கருத்துகள் வந்தன. இதனால் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டன. சேவ் த இன்டர்நெட் மற்றும் ஏ.ஐ.பி உள்ளிட்ட நிறுவனங்கள் விளம்பரம் செய்ததால் கருத்துகள் குவிந்தன.
முன்னதாக தொலைத்தொடர்பு துறை ஒழுங்குமுறை ஆணையத் துக்கு 10 லட்சம் கருத்துகள் ஏப்ரல் மாதம் வந்தன. சில மாதங் களுக்கு முன்பு ஏர்டெல் நிறுவனம் ஏர்டெல் ஜீரோ என்னும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அந்த திட்டத்தில் சில இணைய தளங்களை இலவசமாக பயன்படுத் திக்கொள்ள முடியும் என்று தெரிவித் திருந்தது. அப்போ திருந்து இணைய சமநிலை குறித்த விவாதங்கள் பெருகி வந்தன.