வணிகம்

முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் ரூ.5.9 லட்சம் கோடி நெடுஞ்சாலை திட்டங்கள்: மத்திய அரசு அறிவிப்பு

செய்திப்பிரிவு

நெடுஞ்சாலை துறையை மேம்படுத்த ரூ.5.9 லட்சம் கோடி அளவுக்கான திட்டங்களை மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இதன்மூலம் முதலீடு செய்வதற்கு ஏற்ற சிறந்த திட்டங்கள் இவை என்று முதலீட்டாளர்களுக்கு அழைப்பும் விடுத்திருக்கிறது.

இந்த முதலீட்டு வாய்ப்புகள் கிரீன்பீல்டு மற்றும் பிரவுன்பீல்டு திட்டங்களை உள்ளடக்கியது என்று சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, அடுத்த 3 ஆண்டுகளில் 26,000 கிலோ மீட்டர் தொலைவுள்ள தேசிய நெடுஞ்சாலைகளை உலகத் தரத்துக்கு மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில், தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டு திட்டத்தின் (என்எச்டிபி) கீழ் மட்டும் 20,000 கிலோ மீட்டர் தூர சாலைகள் மேம்படுத்தப்படும்.

இது அரசு, தனியார், கூட்டாண்மை (பிபிபி) முறையில் அரசு தலைமையில் மேற்கொள்ளப்படும் உலகின் மிகப்பெரிய திட்டங்களில் இதுவும் ஒன்றாகும்.

இந்த வருடத்தில் மட்டும் 10,000 கிலோ மீட்டர் சாலை திட்டங்களுக்கு அனுமதிக் கொடுக்க முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. இந்த திட்டங்களில் தனியார் முதலீடு செய்வதற்கு ஏதுவாக சில சீர்த்திருங்களை செய்துள்ளது. இதற்காக நிலங் களை கையகப்படுத்துவதை எளிதாக்குவது உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்படும்.

இந்த திட்டத்தில் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை வழங்கப்பட்டும். முதல் ஐந்து வருடங்களுக்கு 100 சதவீத வரி விலக்கும், அடுத்த ஐந்து வருடங்களுக்கு 30 சதவீத வரிச் சலுகையும் வழங்கப்படும்.

தவிர இந்த திட்டங்களுக்கு தேவையான நீண்ட காலக் கடன்கள் கிடைப்பதற்கு உதவி செய்யப்படும். அதாவது பென்ஷன், இன்ஷூரன்ஸ் திட்டங் களில் இருக்கும் நிதியை நிதி அமைச்சகம் மற்றும் ரிசர்வ் வங்கியின் அனுமதியுடன் எப்படி பயன்படுத்துவது என்று ஆராயப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

உலகளவில் சாலைப் போக்கு வரத்தில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. 48 லட்சம் கிலோ மீட்டர் சாலைகள் உள்ளன.

இதில் தேசிய நெடுஞ் சாலைகளின் பங்கு வெறும் 2 சதவீதம் மட்டுமே. ஆனால் 40 சதவீத போக்குவரத்து தேசிய நெடுஞ்சாலைகளில் நடை பெறுகிறது.

SCROLL FOR NEXT