பிரான்ஸைச் சேர்ந்த ரெனால்ட் நிறுவனமும் ஜப்பானின் நிசான் நிறுவனமும் இணைந்து சென்னையை அடுத்த ஒரகடத்தில் நடத்திவரும் ஆலையில் ஆள்குறைப்பு செய்ய முடிவு செய்துள்ளது. சுமார் ஆயிரம் பேர் வரை இதனால் வேலையிழப்பர் என்று அஞ்சப்படுகிறது.
இவ்விதம் ஆள்குறைப்பு செய்ய திட்டமிட்டுள்ளவர்களில் பெரும்பாலானோர் ஒப்பந்த அடிப்படையிலான ஊழியர்கள், அப்ரன்டிஸ் மற்றும் பழகுநர்களாக பணிபுரியும் பணியாளர்கள் என தெரிகிறது. இது தொடர்பாக ரெனால்ட் நிசான் செய்தித் தொடர்பாளரிடம் கேட்ட போது, இந்திய சந்தையானது வளர்ந்து வரும் சந்தையாகும். இந்தத் தொழிலில் நிலவும் ஏற்ற, இறக்க நிலைக்கேற்ப ஸ்திரமான உத்தியை வகுக்க வேண்டியுள்ளது.
ரெனால்ட் நிசான் நிறுவனம் சந்தையின் தேவைக்கேற்ப தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அதன் வெளிப் படாக உற்பத்தி செயல்பாடு களில் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித் துள்ளார்.
சென்னையில் உள்ள ஆலை யில் தற்போது 8 ஆயிரம் பணி யாளர்கள் பணிபுரிகின்றனர்.
இந்தியச் சந்தையில் சிறிய ரக கார் சந்தையை பிடிக்க தீவிரம் காட்டிவரும் சமயத்தில் இந்நிறுவனம் ஆள்குறைப்பு செய்ய முடிவெடுத்துள்ளது.