வணிகம்

ஓய்வூதிய நிதியை நிர்வகிக்க நிறுவனங்களுக்கு அழைப்பு

பிடிஐ

ஓய்வூதிய நிதியை நிர்வகிப் பதற்கு தகுதி வாய்ந்த நிறுவனங் களுக்கு அழைப்பு விடுக்கப்பட் டுள்ளது. இதற்கான டெண்டரை ஓய்வூதிய நிதி கட்டுப்பாட்டு மற்றும் மேம்பாட்டு ஆணையம் (பிஎப்ஆர்டிஏ) விடுத்துள்ளது.

அரசுத்துறை மற்றும் தனியார் துறையினரின் ஓய்வூதிய நிதியாக ரூ. 90 ஆயிரம் கோடி நிதியம் உள்ளது. இதை திறம்பட நிர்வகிப்பதற்கு தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பிஎப் ஆர்டிஏ-வின் தலைவர் ஹேமந்த் கான்டிராக்டர் தெரிவித்தார்.

முறைசார தொழில்துறையி னரின் நிதியை நிர்வகிக்க 8 நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன. எஸ்பிஐ பென்ஷன் ஃபண்டு, யுடிஐ ரிடையர்மென்ட் சொல்யூஷன், ஹெச்டிஎப்சி பென்ஷன் மேனேஜ்மென்ட், ரிலையன்ஸ் பென்ஷன் ஃபண்டு, ஐசிஐசிஐ பென்ஷன் ஃபண்டு மேனேஜ்மென்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் நிதியை நிர்வகிக்கின்றன.

ஏற்கெனவே உள்ள நிறுவனங்கள் தவிர்த்து தகுதி வாய்ந்த நிறுவனங்கள் நிதியை நிர்வகிக்க விண்ணப்பிக்கலாம் என ஹேமந்த் கான்டிராக்டர் தெரிவித்தார்.

தேர்ந்தெடுக்கப்படும் நிறு வனங்கள் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நிதியை நிர்வகிக்கும் உரிமை பெறும்.

SCROLL FOR NEXT