நீண்ட கால அடிப்படையில் பார்க்கும் போது தங்கத்தை விட பங்குச்சந்தை சிறப்பாக செயல் பட்டு வருகிறது. முதலீட்டாளர் களுக்கு நல்ல வருமானத்தை கொடுத்திருக்கிறது.
நீண்ட கால அடிப்படையில் பார்க்கும் போது பங்குச்சந்தை சராசரியாக 15 சதவீத வருமானம் கொடுத்திருக்கிறது. கடந்த 15-20 வருடங்களில் தங்கத்தின் மீதான வருமானம் 5-6 சதவீதம் என்ற அளவில் மட்டுமே இருப்பதாக பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபியின் தலைவர் யூ.கே சின்ஹா தெரிவித்துள்ளார்
இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
வருமானத்தைக் கொடுக்கும் அதே சமயத்தில் நாட்டின் பொருளா தாரத்துக்கும் பங்குச் சந்தை உதவி செய்கிறது. பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படும் பணம், நாட்டின் கட்டுமானம் உள்ளிட்ட உற்பத்தி துறைக்கு பயன்படுத் தப்படுகிறது.
சமீப காலங்களில் தங்கத்தின் விலை குறைந்து வருவது, நீண்டகாலமாக ரியல் எஸ்டேட் சந்தையில் பெரிய ஏற்றம் இல்லாதது ஆகிய காரணங்களால் பங்குச்சந்தை முதலீட்டுக்கு ஏற்றதாக உள்ளது. அதனால், பொதுமக்கள் தங்கம், ரியல் எஸ்டேட் ஆகியவற்றில் முதலீடு செய்வதைவிட பங்குச்சந்தையில் அதிக முதலீட்டினை செய்து வருகிறார்கள்.
தங்கத்தில் முதலீடு என்பது அவசியமானதுதான். ஆனால் அதில் சிறு பகுதியை மட்டுமே முதலீடு செய்ய வேண்டும். மீதமுள்ள தொகையை இதர முதலீட்டு திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும். இப்போது தங்கத்தின் விலை சரிந்துள்ளது. ஆனால் நீண்ட கால அடிப்படையில் பார்க்கும் போது பங்குச்சந்தை நல்ல வருமானத்தை கொடுத்திருக்கிறது.
அதே சமயத்தில் பங்குச்சந் தையில் குறுகிய கால நோக்கத்தில் முதலீடு செய்யக்கூடாது. சமயங் களில் அதிக லாபமும் கொடுக் கலாம், அதிக இழப்பையும் சந்திக்க நேரலாம். நீண்ட கால அடிப்படையில் சராசரியாக 15 சதவீத வருமானம் கொடுத் திருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சமீபத்தில் உலக தங்க கவுன்சில் தகவல்படி தங்கத்தின் தேவை கடந்த ஜூன் காலாண்டில் 25 சதவீதம் குறைந்திருக்கிறது. அதேபோல கடந்த ஒரு வருடங்களில் சென்செக்ஸ் 2000 புள்ளிகள் உயர்ந்திருக்கிறது.
கடந்த 2014-ம் ஆண்டு மட்டும் சுமார் 30 சதவீதம் உயர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.