வணிகம்

மைக்ரோமேக்ஸ் தலைவர் சஞ்சய் கபூர் ராஜிநாமா

செய்திப்பிரிவு

மைக்ரோமேக்ஸ் தலைவர் பதவியை சஞ்சய் கபூர் ராஜிநாமா செய்திருக்கிறார். செல்போன் விற்பனையில் இந்தியாவின் இரண்டாவது பெரிய நிறுவனம் மைக்ரோமேக்ஸ் ஆகும். அவர் பொறுப்பேற்று ஒரு வருடங்களில் தனது பதவியை ராஜிமாநா செய்திருக்கிறார்.

சஞ்சய் கபூர் நிறுவனத்தில் இருந்து வெளியேறும் முடிவெடுத்திருக்கிறார். இது குறித்து முறையான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.

ஏர்டெல் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பில் இருந்தவர். கடந்த ஜூன் மாதம் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தில் இணைந்தார்.

இது குறித்து கருத்து தெரிவிக்க சஞ்சய் மறுத்துவிட்டார். ஆனால் நிறுவனர்களுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக இவர் வெளியேறியதாகத் தெரிகிறது. சீனா நிறுவனமான அலிபாபா மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தது. இந்த திட்டம் சஞ்சய்க்குப் பிடிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்திய செல்போன் சந்தை யில் சாம்சங் 23 சதவீதத்தை வைத்திருக்கிறது.அதற்கடுத்து 17 சதவீத சந்தையை மைக்ரோமேக்ஸ் பிடித்திருக் கிறது.

ராகுல் சர்மா, ராஜேஷ் அகர்வால், சுமித்குமார் மற்றும் விகாஸ் ஜெயின் ஆகியோர் இணைந்து மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தைத் தொடங் கினார்கள்.

SCROLL FOR NEXT