கடந்த நிதி ஆண்டில் டாடா குழுமத்தின் மொத்த வருமானம் 5 சதவீதத்துக்கு மேல் உயர்ந்து 10,878 கோடி டாலராக இருக்கிறது. இந்த குழுமத்தின் 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் சர்வதேச அளவில் பல்வேறு தொழில்களில் உள்ளன. இந்த நிறுவனத்தின் வருமானத்தில் 70 சதவீதம் வரை வெளிநாடுகளில் இருந்து வருகிறது. வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் வருமானம் 7,341 கோடி டாலராக இருக்கிறது.
2013-14ம் நிதி ஆண்டில் குழுமத்தின் வருமானம் 10,327 கோடி டாலராக இருந்தது. இப்போது 5.3 சதவீதம் உயர்ந்து 10,878 கோடி டாலராக இருக்கிறது.
ரூபாய் மதிப்பில் வருமானம் 6.5 சதவீதம் உயர்ந்து ரூ.6.65 லட்சம் கோடியாக இருக்கிறது. அதேசமயம் நிறுவனத்தின் நிகர லாபம் குறித்த தகவல்கள் வெளி யிடப்படவில்லை.
டாடா குழுமத்தின் பணியா ளர்களின் எண்ணிக்கை 6,11,794 ஆக உள்ளது. இதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தகவல் தொழில் நுட்ப துறையில் இருக்கிறார்கள்.
இந்த துறையில் பணியாற்றும் பணியாளர்களின் எண்ணிக்கை 3.5 லட்சமாக இருக்கிறது. இன்ஜி னீயரிங் பிரிவில் 93,000 நபர்கள் பணியாற்றி வருகிறார்கள். 2013-14-ம் ஆண்டின் இறுதியில் 5,81,473 பணியாளர்கள் இருந்தார் கள்.
மொத்த வருமானத்தில் இன்ஜி னீயரிங் பிரிவின் மூலம் 41 சதவீதமும், தகவல் தொழில்நுப்டம் மற்றும் மெட்டீரியல் பிரிவின் மூலம் தலா 21 சதவீத வருமானமும் கிடைக்கிறது. சேவை மற்றும் எனர்ஜி பிரிவின் வருமானம் தலா 5 சதவீதமாகவும் இருக்கிறது. நுகர்வோர் பொருட்களின் மூலம் கிடைக்கும் வருமானம் 4 சதவீதமாகவும், கெமிக்கல் பிரிவில் கிடைக்கும் வருமானம் 3 சதவீதமாகவும் இருக்கிறது.
டாடா குழுமம் 1868-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 6 கண்டங்களில் இந்த குழுமம் செயல்பட்டு வருகிறது. இதில் 30 நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
பிர்லா குழும வருமானம் ரூ.2.5 லட்சம் கோடி
கடந்த நிதி ஆண்டில் பிர்லா குழுமத்தின் வருமானம் 9 சதவீதம் உயர்ந்து 2.5 லட்சம் கோடி ரூபாயாக இருக்கிறது. மொத்த வருமானத்தில் வெளிநாடுகளில் இருந்து 50 சதவீதம் வருகிறது.