வணிகம்

செல்போன் கோபுரங்களில் அதிக கதிர்வீச்சு: தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு ரூ.10.8 கோடி அபராதம்

செய்திப்பிரிவு

செல்போன் கோபுரங்களில் நிர்ணயிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் அதிக அளவு கதிர்வீச்சை வெளியிடும் கோபுரங்களை நிறுவி செயல்படுத்தியமைக்காக தொலைத்தொடர்பு நிறுவனங் களுக்கு ரூ. 10.8 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

தொலைத் தொடர்பு நிறுவனங் கள் நிறுவிய செல்போன் கோபுரங் களிலிருந்து அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் அதிக அள மின் அலை (இஎம்எப்) வெளியானது கண்டுபிடிக்கப்பட்டதாக நாடாளு மன்றத்தில் அவர் தெரிவித்தார்.

இதில் அதிகபட்சமாக பார்தி ஏர்டெல் நிறுவனத்துக்கு ரூ. 2.15 கோடியும், வோடபோன் நிறுவனத்துக்கு ரூ. 1.80 கோடியும், ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ரூ. 1.65 கோடியும், டாடா டெலி சர்வீசஸ் நிறுவனத்துக்கு ரூ. 1.45 கோடியும் அபராதம் விதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

ஐடியா நிறுவனத்துக்கு ரூ. 95 லட்சமும், ஏர்செல் நிறுவனத்துக்கு ரூ. 90 லட்சமும், அரசுத்துறை நிறு வனமான பிஎஸ்என்எல்-ளுக்கு ரூ. 70 லட்சமும், லூப் நிறு வனத்துக்கு ரூ. 55 லட்சமும், மற்றொரு அரசு நிறுவனமான எம்டிஎன்எல்-ளுக்கு ரூ. 15 லட்சமும், சிஸ்டமா ஷியாம் டெலி சர்வீசஸ் நிறுவனத்துக்கு ரூ. 5 லட்சமும், யுனிநார் நிறுவனத்துக்கு ரூ. 35 லட்சமும், வீடியோகான் நிறுவனத்துக்கு ரூ. 10 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

2015-16 மே 31-ம் தேதி வரையான காலத்தில் 6 அடிப்படை செல்போன் கோபுரங்களில் நிர்ணயிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் அதிக அளவு கதிர்வீச்சு வெளியானது சோதனையின்போது கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

2012-13-ம் ஆண்டில் 103 செல்போன் கோபுரங்களிலும், 2013-13-ம் ஆண்டில் 77 செல்போன் கோபுரங்களிலும் அதிக அளவு கதிர்வீச்சு வெளியானது கண்டு பிடிக்கப்பட்டது. 2014-15-ம் ஆண் டில் இதுபோன்று அளவுக்கதிகமான கதிர்வீச்சு வெளியாகவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

கதிர்வீச்சு அளவு அதிகமான தற்காக விதிக்கப்படும் அபராதத் தொகை ரூ. 5 லட்சத்திலிருந்து ரூ. 10 லட்சமாக உயர்த்தப் பட்டுள்ளதாக அவர் கூறினார். 2015-ம் ஆண்டு மே 31 வரையான காலத்தில் நாட்டிலுள்ள மொத்த செல்போன் கோபுரங்களின் எண்ணிக்கை 9,08,353 என்றும் அவர் கூறினார்.

SCROLL FOR NEXT