வணிகம்

லாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவனங்கள் ஐபிஓ திட்டத்தை சமர்ப்பிக்க வேண்டும்

செய்திப்பிரிவு

பங்குச்சந்தையில் பட்டியலிடப் படாத லாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் தங்களது பொதுபங்கு வெளியீடு (ஐபிஓ) குறித்த திட்டத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்று மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இந்த நிறுவனங்களை பயன் படுத்தி நிதி திரட்ட முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் இந்த தகவலை தெரிவித்தார்.

தற்போது 160 லாபமீட்டும் பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளன. இதில் 43 நிறுவ னங்கள் மட்டுமே பாம்பே பங்குச் சந்தையில் (பி.எஸ்.இ.) பட்டிய லிடப்பட்டுள்ளன.

லாபமீட்டும் பல முக்கிய நிறுவனங்கள் இன்னும் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட வில்லை. ஆர்.ஐ.என்.எல். ஓ.என்.ஜி.சி. விதேஷ், கோல் இந்தியாவின் துணை நிறுவனங்கள், ஏர்போர்ட் அதாரிட்டி ஆப் இந்தியா மற்றும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் ஆகிய பல நிறுவனங்கள் இன்னும் பங்குச்சந்தையில் பட்டிய லிடப்படவில்லை.

இதற்கான பரிந்துரையை பங்குவிலக்கல் துறை பொதுத் துறை நிறுவனங்கள் துறைக்கு (டிபிஇ) தெரிவித்தது.

இதனால் பட்டியலிடப்படுவது விரைவில் கட்டாயம் ஆக்கப்படும் என்றும், அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் விரைவில் போடப்படும் என்றும் நிதி அமைச்சக மூத்த அதிகாரி தெரிவித்தார்.

இந்த நிறுவனங்களை பட்டிய லிடுவதன் மூலம் பங்கு விலக்கல் துறை மூலம் நிர்ணயம் செய்யப் பட்ட இலக்கினை அடைய மத்திய அரசு முயற்சிக் கிறது. இதன் மூலம் நிதிப் பற்றாக்குறையை குறைக்க முடியும் என்று மத்திய அரசு கருதுகிறது.

நடப்பு நிதி ஆண்டில் பங்கு விலக்கல் துறை மூலம் 69,500 கோடி ரூபாய் நிதி திரட்ட மத்திய அரசு நிர்ணயம் செய்திருக்கிறது.

தற்போது 160 லாபமீட்டும் பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளன. இதில் 43 நிறுவ னங்கள் மட்டுமே பாம்பே பங்குச்சந்தையில் (பி.எஸ்.இ.) பட்டியலிடப்பட்டுள்ளன.

SCROLL FOR NEXT