பென்ஷன் தொகையில் 3 சதவீதத்தை பிரைவேட் ஈக்விட்டி பண்ட்களில் முதலீடு செய்யலாமா என்பது குறித்து பென்ஷன் ஒழுங்குமுறை ஆணையம் (பிஎப்ஆர்டிஏ) பரிசீலித்து வருகிறது. இதுகுறித்த இறுதி முடிவு இன்னும் 3 முதல் 4 மாதங்களில் எடுக்கப்படும் என்று தெரிகிறது.
இப்போதைக்கு வென்ச்சர் கேபிடல் மற்றும் பிரைவேட் ஈக்விட்டியில் முதலீடு செய்வது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. ஆனால் இன்னும் மூன்று முதல் நான்கு மாதங்களில் இதுகுறித்த முடிவு எடுக்கப்படும் என்று ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் ஹேமந்த காண்ட்ராக்டர் தெரிவித்தார். ஒரு வேளை முதலீடு செய்வதாக முடிவு எடுக்கப்பட்டாலும் 3 சதவித அளவுக்கு மட்டுமே அனுமதிக் கப்படும். அதுவும் என்.பி.எஸ். திட்டத்தில் முதலீடு செய்பவர் களுக்கு அதிக லாபம் கிடைக்க வேண்டும் என்பதற்காகதான் இந்த முதலீடு என்று கூறினார்.